எடப்பாடி, ஓபிஎஸ் வேண்டாம்.. "சீனியர்" இருக்காரே.. கட்சிக்குள் திடீர் குண்டு போட்ட நாஞ்சில் சம்பத்!
நாமக்கல் : அதிமுகவின் சீனியர் செங்கோட்டையன் தான், அவர்தான் அக்கட்சியின் தலைவர் ஆக வரவேண்டும் என நாஞ்சில் சம்பத் புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான மோதல் போக்கு நிகழ்ந்து வருவது அரசியல் அரங்கை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் , மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருக்கும் நிலையில், அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு கட்சியை கைப்பற்றத்துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சாப விமோசனம் கிடையாது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

திராவிட மாடல்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்றது. திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இந்த விழாவுக்கு தலைமை தாங்கிப் பேசினார். நாஞ்சில் சம்பத் பேசுகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை கொண்டு வந்தது, ஸ்டாலின் உத்தரவின்படி கீழடியில் அகழ்வாராய்ச்சியை ஊக்குவித்தது உள்ளிட்ட தி.மு.க அரசின் பல்வேறு சாதனைகள் குறித்தும், வரலாறு குறித்தும் பேசினார்.

அத்துமீறும் எடப்பாடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "மாவட்ட செயலாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டு, அஜெண்டா இல்லாமல் தனது அடியாட்களை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச வைத்து, ஒற்றைத் தலைமை என்று எடப்பாடி பழனிசாமி அத்துமீறுகிறார். எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத ஒரு இடைசெருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது. அந்த கட்சிக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது.

பாஜகவின் பலிகடா
கட்சியின் அதிகார பூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்கி, அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றால் இந்த செயலுக்கு பின்னால் பா.ஜ.க தான் உள்ளது. வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்துகொள்ள நினைக்கும் பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலிகடாவாகி இருக்கிறார்.

ஒற்றைத் தலைமை
கடந்த 10 நாட்களுக்கு முன் ஒற்றை தலைமையா? அதெல்லாம் கிடையாது என்று வித்தாரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை என்ற பேச்சையே புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுகவை கைப்பற்றத் துடிக்கிறார். இந்தச் செயலுக்கு பின்னால் பாஜகதான் உள்ளது.

செங்கோட்டையன்
மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருக்கும் நிலையில், அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சபா விமோசனமே கிடையாது. கட்சி உடையாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அவர்தான் தலைவர் ஆக வரவேண்டும்." எனப் பேசியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications