டீயா? சரி அரை கப் போதும்.. ரொம்ப சூடு.. நாமக்கல்லில் அருந்ததியினர் வீட்டில் தேனீர் அருந்திய முதல்வர்
நாமக்கல்: நாமக்கல்லில் அருந்ததியினர் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்களது வீட்டில் தேனீர் அருந்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் சென்றுள்ளார். அங்கு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள அவர் தான் தங்கியுள்ள விடுதிக்கு அருகே உள்ள சிலுவம்பட்டி கிராமத்திற்கு சென்றார்.
அங்கு உள்ள அருந்ததியினர் குடியிருப்புக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர்களது தேவைகளை கேட்டறிந்தார். அங்கு 3 சதவீத உள்ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

ஹோமியோபதி
இதையடுத்து ஹோமியோபதி மருத்துவர் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் கல்வி குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். அப்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் முதல்வருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். பின்னர் அவருக்கு தேனீரையும் வழங்கினர்.

டீ ரொம்ப சூடு
டீ ரொம்ப சூடு என்றபடியே அருந்தினார். இதையடுத்து கோவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்கும் கவின், புதுக்கோட்டையில் மருத்துவம் படிக்கும் செல்வதாராணி எனும் மாணவியிடமும் உரையாடி அவர்களது மேற்படிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது கல்விதான் ஒருவருக்கு மிகப் பெரிய செல்வம், அதை யாராலும் அழிக்க முடியாது.

உயர்கல்வி
எனவே நன்கு உயர்கல்வி படித்து சமுதாயத்திற்கும் மாநிலத்திற்கும் சேவை ஆற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் பழனி என்பவர் வீட்டிற்கு சென்ற முதல்வர் அவரது பேத்தி சமிக்ஷாவிடம் அவர் படிப்பு குறித்து கேட்டறிந்தார். அந்த மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வருவதாக தெரிவித்தார்.
Recommended Video

அரசு உதவி
நன்கு படித்து உயர்கல்வி பயில வேண்டும் என்றார். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்து கொடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு திராவிட செல்வி என பெயரிட்டார். இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்ற முதல்வர் அங்கு சிற்றுண்டி அருந்தினார். அப்போது அங்கிருந்த குழந்தைக்கும் ஊட்டி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications