நாமக்கல்லில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. போலீஸ் எஸ்எஸ்ஐ அதிரடி கைது!
நாமக்கல்: நாமக்கல் கொல்லிமலை அருகே கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வாழவந்திநாடு காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் குமார் (வயது 55) என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ மோகன் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக மோகன் குமாரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications