நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"லீக் ஆன வீடியோ".. அசராத எம்பி ராஜேஷ்குமார்.. “நம்மாளுங்க தான்".. அடுத்த புரளி?.. தடதட நாமக்கல் திமுக

நாமக்கல் எம்பி குறித்து இன்னொரு அரசல் புரசல் செய்தி வெடித்து கிளம்பி உள்ளது

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட திமுக எம்பி குறித்து மீண்டும் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் இணையத்தில் வட்டமடிக்கிறது.. இதனால் மீண்டும் பரபரப்பு நாமக்கல்லை கவ்வி வருகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் கேஆர்என் ராஜேஷ்குமார்... இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவியில் உள்ளவர். நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்பட்டு வருகிறது.

திமுக உட்கட்சி தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, கிழக்கு மாவட்ட திமுகவில் மறுபடியும் ராஜேஷ்குமார் தான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் பலமாக வெளிவந்தன.

கல்லெறிந்து பார்த்த ஓபிஎஸ்! எடப்பாடி கொடுத்த 'ஸ்ட்ராங்க் மெசேஜ்’! நாமக்கல் பேச்சை கவனிச்சீங்களா? கல்லெறிந்து பார்த்த ஓபிஎஸ்! எடப்பாடி கொடுத்த 'ஸ்ட்ராங்க் மெசேஜ்’! நாமக்கல் பேச்சை கவனிச்சீங்களா?

 லீக் வீடியோ

லீக் வீடியோ

காரணம், இவரது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில்தான், திமுக கடந்த முறை பெருவாரியான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.. இதுபோக, மேலிட சிபாரிசும் இவருக்கு எப்போதுமே இருந்து வருவதால், இவரை எதிர்த்து ஒருத்தரும் அப்போது வேட்பு மனு தாக்கல் கூட செய்யவில்லை.,. இப்படிப்பட்ட சூழலில்தான், இவர் பேசியதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவியது.. அந்த வீடியோவில், "மணல் அள்ளக்கூடாது என்று கேபி ராமசாமி நிறுத்திட்டார்.. எந்த மாவட்டத்திலும் எந்த மாவட்ட செயலாளரும் இப்படி கூப்பிட்டு மணல் அள்ளுங்க என்று சொன்னதே கிடையாது... ஆனால், நான் ஒருத்தன் தான் அப்படி சொன்னேன்... மீதி எல்லாம் அந்த கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்துட்டு பணம் வாங்கிட்டு போகிறார்கள்.. நான் ஒருத்தன் தான் கட்சிக்காரங்க எல்லாம் சேர்ந்து செய்யுங்க என்று கட்சிக்காரங்க கையில இத கொடுத்தேன்" என்று பேசியிருந்தார்.

 பிளாக் பார்ட்டி

பிளாக் பார்ட்டி

இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை திமுக தரப்புக்கு ஏற்படுத்தியது.. இந்த வீடியோவுக்கு எம்பி ராஜேஷ்குமார் அப்போதே கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.. உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியதுடன், தம்மீது அவதூறு பரப்பப்படுவதாகவும், இந்த வீடியோ குறித்து கட்சி தலைமையிடம் முறையிட்டுள்ளதாகவும் காட்டமாக கூறியிருந்தார்.. எனினும், இந்த விஷயத்தை வழக்கம்போல் பாஜக கையில் எடுத்தது.. திமுகவை தாக்கி ட்வீட்களையும் பதிவிட்டது.. மற்றொருபக்கம், மெகா பதவி ஒன்று தன்னை தேடி "ஆன்தி வே"யில் வரும்போது, இப்படி தேவையில்லாமல் வாயை கொடுத்து சிக்கி கொண்டுவிட்டாரே என்ற புலம்பல்களும் நாமக்கல் திமுகவில் கிளம்பியது..

 டீல் ஓகே?

டீல் ஓகே?

கடைசியில் அத்தனை சலசலப்புகளையும் ராஜேஷ்குமார் நொறுக்கி தள்ளிவிட்டார்.. ராஜ்சபா எம்பி பதவிக்கு திமுக வேட்பாளராக நாமக்கல் ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டார்.. இதையடுத்து, அவரது அரசியல் அங்கு வேகமெடுத்துள்ளது.. எனினும் மீண்டும் ஒரு சலசலப்பு நாமக்கல்லில் வெடித்து வருகிறது. டாஸ்மாக் கடைகள் அடைத்திருக்கும் நேரத்தில் "பிளாக்"கில் சரக்கு ஓடுகிறதாம்.. இந்த சரக்குகளில் நிறைய வருமானம் கொட்டுவதாகவும், நாமக்கல் மாவட்ட பார் பார்ட்டிகள் இதனால் பலன் பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. இந்த விஷயம் தெரிந்த போலீஸார், "பிளாக்" பார்ட்டிகள் மீது கேஸ்களை பதிவு செய்தால், விஷயத்தை ராஜேஷ்குமார் வரை கொண்டு சென்றதாக தெரிகிறது..

 நம்மாளுங்க..தான்

நம்மாளுங்க..தான்

"நம்மாளுங்க தான்... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள்" என்று டிஎஸ்பியை அழைத்து சொன்னாராம்.. அதையும் மீறி போலீசார் தங்கள் கடமையில் கண்ணாக இருந்து வருகிறார்களாம்.. பிளாக் நபர்களுக்கு எம்பி மறைமுகமாக உதவுகிறார் என்ற தகவல் வட்டமடிக்கிறது. ஆனால், இதையும் எம்பி தரப்பு மறுத்து வருகிறதாம்.. வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு பொய் தகவல்கள் பரப்பிவிடப்படுவதாக கொந்தளிக்கிறார்கள்.. இதில் எது உண்மை என்று தெரியாத சூழலில் நாமக்கல் திமுகவில் மீண்டும் புயல் அனலடித்து சுழன்று வருகிறது..!!

English summary
Did the dmk MP Rajeshkumar condemn the DSP and whats happening in Namaklal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X