நாமக்கல்லில் சினேகா.. கொடிய கோகிலாவால் "மிதந்த" பூவரசி.. குன்றத்தூர் அபிராமியை ஞாபகம் இருக்கா?
நாமக்கல்: நாமக்கல் சினேகா செய்த காரியம், ஒட்டுமொத்த பேரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் தீவிரமாக நடத்தி வருகிறார்கள். சினேகாவுடன் கைதான கோகிலா யார்?
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா.. இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவருடைய மனைவி சினேகா. இந்த தம்பதியினருக்கு பூவரசி என்ற 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்.

தம்பதி: ஆனால், திருமணமாகி ஒருசில மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.. அதனால், கடந்த 3 வருடங்களாகவே, இவர்கள் இருவரும் தனித்தனியே பிரிந்து அவரவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்கள்... முத்தையாவை போலவே, சினேகாவும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அப்போதுதான், வேலை செய்யும் இடத்தில், சரத் என்பவர் அறிமுகமானார்.. இவருடனான உறவு, கள்ளக்காதலாக மாறியது.. எனவே, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.. இந்த விவகாரம் சினேகாவின் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.. எனவே, சினேகாவை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். 4 வயது குழந்தையை வைத்துக் கொண்டு, இப்படி தவறான உறவில் ஈடுபட கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
குழந்தை: இதனால், சினேகாவின் கோபம் முழுக்க , தன்னுடைய குழந்தையின் பக்கம் திரும்பியது.. எனவே, குழந்தையை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சினேகா, இதற்காக தன்னுடைய பெரியப்பா மகள் கோகிலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்டார்.
சம்பவத்தன்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு போய், அந்த பகுதியிலிருந்த தோட்டத்தில் கிணற்றில் வீசியெறிந்துவிட்டனர்.. இதில் குழந்தை கிணற்றிலேயே மூழ்கி இறந்துவிட்டது.. மறுநாள் கிணற்றில் குழந்தையின் உடல் மிதந்ததைகண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..
தேடுதல் வேட்டை: தகவலறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கியபோதுதான், சினேகா மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு தப்பியோடிய சினேகா, கோகிலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.. கடந்த 2018-ல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குன்றத்தூர் அபிராமி சம்பவம். தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக பெற்ற 2 குழந்தைகளையும், பாலில் விஷம் வைத்து கொன்றவர் இந்த குன்றத்தூர் அபிராமி. இது தொடர்பான வழக்கு நடந்து முடிந்துள்ள நிலையில், அபிராமி மீது குற்றமும் நிரூபணமாகி விட்டது. ஆனால், இன்னும் தீர்ப்பு வெளியாகவில்லை.
பிஞ்சு குழந்தைகள்: உலகமே அறியாத, பிஞ்சு குழந்தைகளை, பெற்ற தாயே துடிதுடிக்க கொல்வதையும், சித்ரவதை செய்வதையும் ஜீரணிக்கவே முடிவதில்லை.. இதுபோன்ற "அபிராமிகளின்" அட்டகாசங்களும் இன்னமும் அடங்குவதில்லை...
அபிராமி போன்றோருக்கெல்லாம் தண்டனையும் தரப்படவில்லை.. ஒவ்வொரு தாமதமான தீர்ப்புதான், இதுபோன்ற சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடப்பதற்கு காரணமாகி கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த வேண்டியிருக்கிறது..!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications