எனக்கே ஸ்கெட்சா? ’பி’ டீம் ஓபிஎஸ்! நாமக்கல்லில் கொந்தளித்த எடப்பாடி! நிமிர்ந்து உட்கார்ந்த தங்கமணி!
நாமக்கல் : எதிரிகளுக்கு வழி விட கூடாது என நினைத்து ஓ.பி.எஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பி டீம் உருவாக்கி கட்சிக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர் எனவும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான நாமக்கல் தங்கமணி முன்னிலை வகித்தார்.
நாமக்கல் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏரளமான அதிமுகவினர் கலந்து கொண்ட நிலையில், தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
’அவரை’ தூக்கணும்! தங்கமணியை குறி வைக்கும் ஓபிஎஸ் கோஷ்டி! ஓ அதுக்குத்தான் இந்த பேச்சா? அதிமுக சண்டை!

எடப்பாடி பழனிசாமி
நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி," நாமக்கல் மாவட்டமே குலுங்கும் வகையில் இங்கு கூட்டம் கூடியுள்ளது. அதிமுக தொடங்கி 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அதிமுக. முதல்வர் ஸ்டாலின், அதிமுகவை முடக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது.தாங்கள் ஆட்சியில் இருந்த போது சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியிருந்தது. அப்போது அராஜகம் செய்து குழப்பம் ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.

பி டீம் ஓபிஎஸ்
அதிமுக அரசை வீழ்த்துவதற்காக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி.எஸ். எதிரிகளுக்கு வழி விட கூடாது என நினைத்து ஓ.பி.எஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பி டீம் உருவாக்கி கட்சிக்கு எதிராக செயல் பட்டு வருகின்றனர். திமுக , அதிமுகவை எதிர்க்க முடியாத நிலையில் நம் மீது வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மெகா கூட்டணி
கொல்லைப் புறம் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்த முயன்றுகின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவுடு புடியாக ஆக்கி அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின், அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகத்தை மிரட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். நாமக்கல் நாடாளுமன்றத்தில் தேர்தல் போது யார் போட்டியிட்டாலும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

கனவு பலிக்காது
அதிமுகவினர் எழுச்சியோடு பணியாற்றி வருகின்றனர். ஸ்டாலின் கனவு எதிர்காலத்தில் பலிக்காது. 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு அச்சாணி இக்கூட்டம். ஸ்டாலின் அவர்களுக்கு மறதி அதிகம் என கருதுகிறேன். ஒரு பொம்மை போல் முதல்வர் உள்ளார். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதே உங்களது சாதனை" என்றார்.

மாஸ் காட்டிய தங்கமணி
இந்த நிலையில் நாமக்கல்லில் தங்கமணி ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டமானது ஏற்கனவே இரண்டு முறை ரத்தானது. தற்போதும் நடைபெறுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். ஏற்கனவே முதல்வர் பதவிக்கு தங்கமணி முயற்சி செய்ததாக யூகங்கள் பரவி வரும் நிலையில், கட்சியிலும் உரிய பதவிகள் கிடைக்காததால் தங்கமணி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தனக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை என்பதை விளக்கும் வகையிலேயே கூட்டத்தில் பிரம்மாண்டம் காட்டி இருந்தார் தங்கமணி. இதை பார்த்து எடப்பாடி பழனிச்சாமியும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.