Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் தொகுதிக்கு நான் எதுவுமே செய்யலையா? வாங்க அண்ணாமலை நேருக்கு நேர் விவாதிக்கலாம்! -கொங்கு ஈஸ்வரன்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: தனது சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதி செயல்பாடுகளை பற்றியும் விமர்சனம் செய்த அண்ணாமலை, தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.

விவாதம் நடத்த தேதியையும், நேரமும், இடமும் அண்ணாமலையே குறிப்பிடட்டும் தாம் வருகிறேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

Eswaran challenged, Is Annamalai ready to discuss with him face to face?

நேற்றைய தினம் பாதயாத்திரையாக திருச்செங்கோட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் சட்டமன்ற உரைகளைப் பற்றி விமர்சித்து இருக்கிறார். கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். சட்டமன்ற உரை என்பது மேடைப்பேச்சு போல் அல்ல. பேசிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமென்றாலும் படிக்க முடியும். பொய்யான செய்திகளை திருச்செங்கோட்டில் பேசிய அண்ணாமலை அவருடைய சட்டமன்ற உறுப்பினர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம் அல்லது என்னிடத்திலேயே நேரடியாக பேசியிருக்கலாம்.

ஒரு தேசிய கட்சியினுடைய மாநில தலைவர் நேர்மையாக பேச வேண்டாமா. அதே போல சட்டமன்றத் தொகுதியிலே செயல்பாடு இல்லை என்றும் பேசி இருப்பதில் உண்மை இல்லை என்பதை திருச்செங்கோடு பாஜக உறுப்பினர்களே அறிவார்கள். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி பேசி இருக்கிறார். திருச்செங்கோட்டிற்கு ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்திய கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது.

இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது. திருமணிமுத்தாறு திட்டம் 10236 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு ஆய்வில் இருக்கிறது. என்ன நடந்திருக்கிறது என்று தெரியாமல் மக்களிடம் பொய் சொல்வது நியாயமா? இந்த அரசு அமைந்த பின்னால் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கீழ்கண்ட பணிகள் நடந்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?

1. 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.

2. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50% முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை துவக்க இருக்கிறார்.

3. திருச்செங்கோடு நகரத்தில் உள்ள ஐந்து குளங்களும் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

4. ஒன்பது கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

5. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

6. 17 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் விடப்பட்டு இருக்கின்றன.

7. 36 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு நகரத்தில் இருந்து தோக்கவாடி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

8. திருச்செங்கோடு நகரத்திலிருந்து சண்முகா கல்லூரி வரை சங்ககிரி சாலையை 34 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்ற ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது.

9. புறநகர் பேருந்து நிலையத்திற்கு 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

10. மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் கருங்கல்பட்டியில் 4.50 கோடி ரூபாய் செலவில் அப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால எதிர்பார்ப்பான ஆற்று பால பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

11.நெடுஞ்சாலைத்துறை சார்பாக தொகுதி முழுவதும் பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

12. திருச்செங்கோடு நகராட்சியில் 60 லட்சம் மதிப்பீட்டில் 350 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

13. தேர் ஓடுகின்ற நான்கு ரத வீதிகளில் மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றுகின்ற பணி தொடங்கப்பட்டிருக்கின்றது.

14. 3 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அர்த்தநாரீஸ்வரருக்கு புதிய தேர்கள் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

15. மாதம் மாதம் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

16. ஒவ்வொரு மாதமும் கோட்டாட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இந்த மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டிருக்கிறது.

17. அனிமூர் மக்களின் பிரச்சனையாக இருந்த குப்பை கிடங்கை அகற்றுவதற்கு 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

18. திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு 23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது.

19. மல்ல சமுத்திரம் ஒன்றியம் மற்றும் எலச்சிபாளையம் ஒன்றியம் பகுதிகளுக்கு பூலாம்பட்டி குடிநீர் திட்ட பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது.

20. திருச்செங்கோடு ஒன்றியத்திற்கும், திருச்செங்கோடு நகரத்திற்கும் கூட்டு குடிநீர் திட்டங்கள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

21. 2.75 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம் கட்டப்பட்டிருக்கிறது.

22. திருச்செங்கோடு நகராட்சி மற்றும் திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

சட்டமன்றத்தில் திருச்செங்கோடு தொகுதிக்கு மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்திற்கும் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுக்க தேவையான பல்வேறு பொது விஷயங்களையும் பேசி இருக்கின்றேன். எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? இன்னும் பல விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. அதற்காக என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் திரு அண்ணாமலை பத்திரிகையாளர்கள் முன்பு என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+