நாமக்கல்லில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.. கணவன் மனைவி மரணம்..ஒருவர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீ விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காலியான சிலிண்டரை பெண் ஒருவர் மாற்றியுள்ளார். சிலிண்டரை மாற்றிய பின் அடுப்பை பற்ற வைத்த போது கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Gas cylinder explosion accident in Namakkal Husband and wife die in fire accident

இந்த விபத்தில் வீட்டில் இருந்த தம்பதியர் பார்த்தசாரதி, தனலட்சுமி படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+