Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இட்லிக்கு ரேஷன் அரிசி.. இப்ப நேரா கோழிப்பண்ணைக்கே மூட்டை போகுதாம்.. ஆக்‌ஷனில் போலீஸ்.. நாமக்கல் குஷி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: ரேஷனில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் அரிசியை முறைகேடாக விற்று, அவைகளை கடத்தினால், சம்பந்தப்பட்டவர்களின் ரேஷன் கார்டு பறிமுதல் செய்யப்படும்" என்று காவல்துறை பலமுறை எச்சரித்துள்ளது. எனினும், கடத்தல்கள் இன்றுவரை அசால்ட்டாக நடந்து கொண்டிருக்கின்றன.. இதனை கட்டுப்படுத்துவதற்காகவே, தமிழக எல்லைகளில் காவல்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளனர்.. இதோ நாமக்கல்லில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.

ரேஷன் கடையில் ரேஷன்தாரர்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை கேரளா, ஆந்திரா, கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கு கடத்தி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இவைகளை விற்பதற்கென்று புரோக்கர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.. இதற்கு தனி கமிஷன்களும் உண்டு..

ration Namakkal Idly Batter

இட்லி மாவு பாக்கெட்

ரேஷன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி, அதனை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு மறுபடியும் நம்மிடமே விலைக்கு விற்பனை செய்கிறார்கள். சிலர், இட்லி மாவு அரைத்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதற்காக, இந்த ரேஷன் அரிசியை பயன்படுத்தி கொள்கிறார்கள்.. இதில் நல்ல லாபம் வருவதால், நேரடியாகவே அரிசி மில்களுக்கு மூட்டை மூட்டையாக வாகனங்களில் வைத்து கடத்தி செல்கிறார்கள்.. இதுபோன்றவர்களை குறி வைத்துதான், காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. .

எகிறி குதித்து ஓடிய டிரைவர்

நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் வேனுடன் சிக்கியிருக்கிறார்.. பள்ளிபாளையம் அருகே புதுமண்டபத்தூர் பகுதியில் குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை நாமக்கல் எஸ்ஐ ஆறுமுக நயினார், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் முருகேசன், முதல்நிலைக் காவலர்கள் கார்த்தி, வினோத்குமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்... அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்ததால், அதனை சோதனை செய்வதற்காக நிறுத்தினர்.
ஆனால் வாகனம் அங்கு நிற்காமல் சிறிது தூரம் தள்ளி நின்றது. அதிலிருந்த டிரைவர் பவானியை சேர்ந்த பாலச்சந்தர் (37) வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு, வேனிலிருந்து எகிறி குதித்து தப்பியோடினார். இதனால் போலீசார் அவரை விரட்டி பிடித்து கைது செய்தனர்.. அந்த வாகனத்தையும் சோதனையிட்டனர். அப்போது அதில் 65 சாக்கு மூட்டைகளில் 1625 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

பரபர வாக்குமூலம்

பிறகு கைதான வேன் டிரைவர் பாலச்சந்தரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அதாவது, வெப்படை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி, வையப்பமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு விற்பனை செய்து வருகிறாராம் பாலச்சந்தர்..

இப்போதும் கோழிப்பண்ணைக்கு ரேஷன் மூட்டைகளை கொண்டு சென்றபோதுதான் போலீசில் சிக்கியிருக்கிறார்.. இதையடுத்து, வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், பாலச்சந்தரை கைது செய்து நாமக்கல் ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் இட்லி மாவு அரைக்க ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்த நிலையில், கோழிப்பண்ணைகளுக்கும் ரேஷன் அரிசி கொண்டு செல்வதாக தகவல் வெளியாகியிருப்பது, நாமக்கல் மாவட்டத்தில் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.

மகிழ்ச்சி தகவல்

எனவே தமிழக எல்லைகளில் மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலுமே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அத்துடன், 1625 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்திருப்பது, நாமக்கல் மாவட்ட ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை, மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.

"ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்கப்பட்டுள்ளது. புகார் இருந்தால் 1967 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பது, சேவை குறைபாடு, தரம் குறைவு என்பன உள்பட மொத்தம் 97,535 புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கடந்த மாதம் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+