ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கிடைத்தது எப்படி? பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்டை அலசிய ஸ்டாலின்!
நாமக்கல்: திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு மீண்டும்
ராஜ்யசபா சீட் கிடைத்ததன் பின்னணியில் அவரது பெர்ஃபாமன்ஸ் கார்டு உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற ராஜேஷ்குமார்,
மிக குறுகிய காலத்தில் நாடாளுமன்ற செயல்பாடுகளில் முழுமையான ஆர்வம் காட்டி
ஸ்டாலினிடம் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவருக்கு மீண்டும் ராஜ்யசபா
சீட் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி தீர்த்தனர்.

ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன்
10-ம் தேதி நடைபெறுகிறது. அதில் திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும்
சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் பெற முடியும். இதனிடையே
திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு 1 சீட்டை கொடுத்துவிட்டதால்
மீதமிருக்கும் 3 இடங்களில் போட்டியிடுகிறது. தஞ்சை கல்யாணசுந்தரம்,
கிரிராஜன், ராஜேஷ்குமார் ஆகிய மூன்று பேரையும் ராஜ்யசபா தேர்தல்
வேட்பாளர்களாக திமுக தலைமை அறிவிக்கவும் செய்துவிட்டது.

மீண்டும் வாய்ப்பு
இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள ராஜேஷ்குமாருக்கு
மீண்டும் எம்.பி.யாகும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதற்கு காரணம் ராஜேஷ்குமாரின் பெர்ஃபாமன்ஸ் கார்டு தான் எனத்
தெரிவிக்கப்படுகிறது. முதலில் சோதனை அடிப்படையில் மட்டுமே கடந்த செப்டம்பர்
மாதம் ராஜேஷ்குமாரை எம்.பி.யாக்கி டெல்லி அனுப்பி வைத்தார் ஸ்டாலின். ஆனால்
ராஜேஷ்குமாரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ஸ்டாலினின்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிற வகையில் நாடாளுமன்ற செயல்பாடுகளில் ஆர்வம்
காட்டி ஸ்கோர் செய்துவிட்டார்.

மாநிலங்களவையில் பேச்சு
நாமக்கல் முசிறி இடையே சாலை அமைக்க வேண்டும் என மாநிலங்களவையில் கோரிக்கை
வைத்ததுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தொடர்ந்து சந்தித்து
சாலைப்பணிகளுக்கு நிதி ஒதுக்க வைத்தார். அப்போது இந்த தகவலை அறிந்த
முதலமைச்சர் ஸ்டாலின் பரவாயில்லையே சபாஷ் என ராஜேஷ்குமாரை பாராட்டவும்
செய்தார். அதேபோல் ஊரக வளர்ச்சி முகாமை கலைக்கக் கூடாது என இவர் பேசியதும்
அதற்கான காரணத்தை விளக்கியதும் தேசியளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.

உதயநிதியின் குட்புக்
இதேபோல் மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்க
வேண்டும், கொல்லிமலையில் சித்தா ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் , என
இவர் பேசியவைகள் அனைத்தும் உடனுக்குடன் முதல்வரை இம்ப்ரஸ் செய்யும்
விதமாகவே இருந்தது. இதனிடையே கட்சிப் பணிகளிலும் ராஜேஷ்குமார் காட்டும்
வேகம் முதல்வர் மட்டுமல்லாமல் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின்
குட்புக்கிலும் அவரை இடம்பெறச் செய்துள்ளது.

97 கேள்விகள்
மாநிலங்களவைக்கு சென்றோமோ மிக்சர் சாப்பிட்டுவிட்டு வந்தோமா என்றில்லாமல்
கடந்த 9 மாதங்களில் மட்டும் 13 விவாதங்களில் பங்கேற்றதுடன் 97
கேள்விகளையும் அவர் எழுப்பியிருக்கிறார். இப்படி இவரது செயல்பாடுகளில்
குறைகள் இல்லாததாலும், பெர்ஃபாமன்ஸ் எதிர்பார்த்த படி இருந்ததாலும்
மீண்டும் ராஜேஷ்குமாருக்கு ராஜ்யசபா சீட் வழங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?












Click it and Unblock the Notifications