செல்போன் பார்த்த அதிகாரி! என்னய்யா கொஞ்சம் கூட பொறுப்பில்லாம இருக்க! திட்டி தீர்த்த அமைச்சர் நேரு!
நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த செயற் பொறியாளர் ஒருவரை அமைச்சர் கே.என்.நேரு ஒருமையில் வெளுத்து வாங்கிய நிகழ்வு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
''ஏன்யா, ஒரு கலெக்டர், மினிஸ்டர் எல்லாம் உட்கார்ந்திருக்கோம், நீ பாட்டுக்கு செல்போனை நோண்டிக்கிட்டு இருக்க, உனக்கு வேலை பார்க்கனும்னு அபிப்ராயம் இல்லையா'' என அமைச்சர் நேரு பட்டாசை போல் கடுகடுவென அந்த அதிகாரியை பொரிந்து தள்ளினார்.
செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அந்த அதிகாரி விக்கித்துப்போய் எழுந்து நின்று ''சாரி சார்''. ''சார் சார்'' என திரும்ப திரும்பக் கூறிக்கொண்டே நின்றார்.
Recommended Video

அமைச்சர் நேரு
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் ஒருவர், முன் வரிசையில் முதல் ஆளாக அமர்ந்துகொண்டு அடிக்கடி நிமிடத்துக்கு நிமிடம் தனது செல்போனை பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தார். சரி ஏதோ அவசர அழைப்பாக இருந்திருக்கலாம், பொறியாளர் செல்போனை பார்க்கிறார் என அமைச்சர் நேரு சிறிது நேரம் பொறுமை காத்து பார்த்தார்.

எகிறிய அமைச்சர்
ஆனாலும் அந்த செயற் பொறியாளர் சுதாரிக்கவில்லை. அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நம்மை எங்கு கவனிக்கப் போகிறார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஏகத்துக்கும் டென்ஷனான அமைச்சர் நேரு, ஒருமையில் அவரை வதக்கி எடுத்துவிட்டார். ''ஏன்யா, ஒரு கலெக்டர், மினிஸ்டர் எல்லாம் உட்கார்ந்திருக்கோம், நீ பாட்டுக்கு செல்போனை நோண்டிக்கிட்டு இருக்க, உனக்கு வேலை பார்க்கனும்னு அபிப்ராயம் இல்லையா'' என்றும் ''நீ இப்படி செய்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை'' எனவும் வெளுத்து வாங்கினார்.

சாரி சார்
கூட்டத்தில் அமைச்சர் சரியாக தன்னை பார்த்துவிட்டாரே என்ற பதற்றத்துடன் எழுந்த அந்த செயற் பொறியாளர் ''சாரி சார்''. ''சார் சார்'' என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். ''உட்காருய்யா உன் சாரி யாருக்கு வேணும், இனி கரெக்டா இரு'' என அமைச்சர் நேரு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோபக்காரர்
அமைச்சர் கே.என்.நேருவை பொறுத்தவரை ஏற்கனவே கோபக்காரர். எந்த வேலையானாலும் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் நடக்க வேண்டும் என விரும்புவர். அவரிடம் போய் வாலண்டியராக சிக்கியிருக்கிறார் நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் நடராஜன்.












Click it and Unblock the Notifications