நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளடி வேலைகளை தவிடு பொடியாக்கிய ராஜேஷ் குமார் எம்.பி.! கிடைத்தது நாமக்கல் கிழக்கு செயலாளர் பதவி

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி.யும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்தில்குமாரும் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மதுரா செந்தில்குமாருக்காவது போட்டி இருந்தது, ஆனால் ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வாகியிருப்பதுடன் தனக்கு எதிராக சொந்தக் கட்சியினர் பார்த்த உள்ளடி வேலைகளையும் தவிடு பொடியாக்கியுள்ளார்.

இரண்டு பேருமே இளம் வயதுடையவர்கள் என்பதால் அடுத்த பத்தாண்டுக் காலம் அவர்களை அசைக்க முடியாது எனக் கூறும் அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 திமுக எம்பியாகும் ராஜேஷ்குமார்.. ம்க்கும் 1 வருஷம் கூட இல்லையா?.. இதுக்குத்தான் இவ்வளவு போராட்டமா? திமுக எம்பியாகும் ராஜேஷ்குமார்.. ம்க்கும் 1 வருஷம் கூட இல்லையா?.. இதுக்குத்தான் இவ்வளவு போராட்டமா?

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் மிக முக்கியமான மாவட்டமாக பார்க்கப்படுகிறது. லாரி பாடி கட்டுதல், கோழிப்பண்ணைகள், பள்ளிகள், என ஏராளமான சிறப்புகள் இந்த மாவட்டத்திற்கு உள்ளன. இந்நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக மதுரா செந்தில்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞரணியில் இருந்து புரோமோஷன் ஆகியிருக்கிறார். இவரை எதிர்த்து வெப்படை செல்வராஜ் முட்டி மோதி பார்த்தார்.

மதுரா செந்தில்

மதுரா செந்தில்

ஆனால் தலைமையிடம் வேலையாகவில்லை. அதேபோல் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கமும் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தினார். ஆனால் ஆரம்பத்திலேயே இந்த முயற்சியை கைவிடுமாறு தலைமை கறாராக கூறிவிட்டது. இதனிடையே நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக ராஜேஷ்குமார் எம்.பி. மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு டீம் பெரிய லாபி செய்து பார்த்தது. ஆனால் அதுவும் தலைமையிடம் எடுபடவில்லை.

ராஜேஷ்குமார் எம்.பி.

ராஜேஷ்குமார் எம்.பி.

கட்சிக்காரர்களுக்கு உதவுகிறேன் என்று ராஜேஷ்குமார் முன்னர் ஒரு முறை பேசிய வீடியோவை மாவட்டச் செயலாளர் தேர்தல் நடைபெறும் தருணத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்த பார்த்தது அந்த டீம். ஆனால் இது கட்சியில் உள்ள சில கருப்பு ஆடுகளின் சதி என்பதை தலைமைக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறினார் ராஜேஷ்குமார். இப்படி தனக்கு எதிராக பின்னப்பட்ட சூழ்ச்சிகளை தகர்த்தெறிந்து மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை தக்க வைத்திருக்கிறார் இவர்.

இளைஞரணி

இளைஞரணி

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திமுக மாவட்டச் செயலாளர்களாக உள்ள இரண்டு பேருமே இளைஞரணியில் இருந்து புரோமோஷன் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் முக்கியத் தலைவராக உள்ள தங்கமணியை எதிர்த்து தில்லாக அரசியல் செய்யும் வகையில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளது திமுக தலைமை.

English summary
Rajeshkumar MP and Madura Senthilkumar have been announced as Namakkal East, west district DMK secretaries by the leadership.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X