நாமக்கல் ’கிட்னி’ பாளையம்.. ஒற்றை கிட்னியுடன் நடமாடும் 90 பெண்கள்! அந்த மருத்துவமனையா? பகீர் தகவல்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களின் கிட்னியை சட்ட விரோதமாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மூன்று லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும் கிட்னிகள் 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவதாக பகீர் புகார் எழுந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கியது கிட்னி திருட்டு. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களது உடல் உறுப்புகளை விற்பனைக்காக பயன்படுத்தி வந்தது ஒரு கும்பல். அதை ஒட்டி பல சினிமா காமெடிகள் கூட வந்தது.
அதற்கு பிறகு அவையெல்லாம் ஒழிந்து விட்டதாக நம்பப்பட்ட நிலையில் இன்னும் அந்த கொடூரம் நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. வர்த்தக நகரமான நாமக்கலில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து திருடும் கும்பல் நடமாடி வருகிறது.

பள்ளி பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிட்னி பாளையம் என கோட் வேர்டு வைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறது. புரோக்கர் கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களின் ஏழ்மையான பின்னணி கொண்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தொழிலாளர்களை சந்திக்கும் புரோக்கர்கள் அவர்களது சிறுநீரகங்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் வரை அட்வான்ஸ் கொடுக்கின்றனர். பின்பு அவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களது சிறுநீரகங்கள் எடுக்கப்படுகிறது. பின்பு அவை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுவது தெரிய வந்திருக்கிறது.
அதே நேரத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களுக்கு அட்வான்ஸ் மட்டும் கொடுக்கப்பட்டு மீதி பணத்தை தருவதில்லை எனவும் கூறப்படுகிறது. மீதி பணத்தை வாங்கினாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை தரப்படாததால் அவர்கள் வாங்கிய பணத்தை சிகிச்சைக்கே செலவழித்துவிட்டு உயிருக்கு ஆபத்தான சூழலில் வாழ்வதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக புரோக்கர்கள் பொதுமக்களிடம் பேசிய வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் ஒப்புதல் பெற பேசும் வீடியோக்களும் வெளியாகி இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி நாமக்கல் பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளில் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒற்றைக் கிட்னியுடன் வாழ்ந்து வருவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. கோவை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல மருத்துவமனைகளும் அதில் பணியாற்றும் மருத்துவர்கள் இந்த கொடூர சம்பவத்திற்கு துணை போவது தெரியவந்துள்ளது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணையை தீவிரப்படுத்தி குற்றம் செய்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ரமதாஸ், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோரும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க கிட்னி திருட்டில் ஈடுபடும் மருத்துவமனைகள் குறித்த பகீர் தகவலும் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட ஒரு மருத்துவமனையும், பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு மருத்துவமனையும் இந்த கிட்னி திருட்டில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications