நாமக்கல்லில் ஷாக்.. ரூ.5,000க்கு கருணை கொலை.. சிக்கிய 3 பேரையும் அப்படியே விடுவித்த போலீஸ்!சர்ச்சை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ரூ.5 ஆயிரம் பெற்று கொண்டு விஷஊசிப்போட்டு கருணை கொலை செய்த வந்த 3 பேர் வசமாக போலீசாரிடம் சிக்கினர். இந்நிலையில் தான் புகார் கொடுக்க யாரும் பள்ளி பாளையம் போலீசார் விடுவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
கருணை கொலை.. குறிப்பிட்ட நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டு பிழைக்க வாய்ப்பு இல்லாமல் துன்பப்படுவோரை உறவினர்கள் உரிய அனுமதியுடன் கொல்வது தான் கருணை கொலையாகும். இந்த கருணை கொலையை உரிய அனுமதியுடன் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் செய்வார்கள்.

கருணை கொலையை பொறுத்தமட்டில் 2 வகைகள் உள்ளன. ஒன்று விஷ ஊசி செலுத்தவது. மற்றொன்று குறிப்பிட்ட நோயாளி உயிர் வாழ்வதற்கான சிகிச்சைகள் அளிக்காமல் இருப்பது அல்லது செயற்கை சுவாசத்தை நிறுத்துவது என 2 வகைகளில் கருணை கொலை செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும் கருணை கொலையை உரிய அனுமதியின்றி செய்வது என்பது குற்றமாகும். இந்நிலையில் தான் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கருணை கொலை உரிய அனுமதியின்றி நடப்பது தெரியவந்தது. வெறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பெற்று கொண்டு இந்த கொலையை சிலர் செய்து வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் வீடியோவுடன் ஆதாரம் திரட்டியது. அதன்படி ரூ.5 ஆயிரம், ரூ.8 ஆயிரம் பெற்று கொண்டு விஷஊசியுடன் கருணை கொலைக்கு ஒப்புக்கொண்ட 2 பேர் வசமாய் சிக்கினர். விசாரணையில் அவர்கள் மோகன், அப்பாவு, கோவிந்தன் என்பது தெரியவந்தது.
இதில் அப்பாவு என்பவர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து விஷஊசி, மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கோவிந்தன் என்பவர் பள்ளிபாளையம் மருத்துவமனையில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் பள்ளிபாளையம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து டிஎஸ்பி மகாலட்சுமி நேரடியாக வந்து விசாரணை நடத்தியுள்ளார். இதனால் போலீசார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பபு எழுந்தது. ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக 3 பேரும் போலீஸ் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 பேருக்கும் எதிராக யாரும் புகார் கொடுக்கவில்லை எனக்கூறி 3 பேரையும் போலீசார் விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களின் விடுதலைக்கு பின்னால் அதிகாரமிக்கவர்களின் தலையீடு இருக்குமோ? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
****












Click it and Unblock the Notifications