நாமக்கல் கோழிக்கறியும், அந்த "காதலியும்".. கண்ணை மறைத்த "உறவு".. தலை தலையா அடிச்சிக்கிட்டாரே தாத்தா
நாமக்கல்: நாமக்கல்லில் சிக்கன் ரைஸில் விஷத்தை கலந்து, தன்னுடைய தாத்தாவுக்கு தந்துள்ளார் பேரன் பகவதி.. இதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன?
நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியைச் சேர்ந்த 20 வயது பகவதி, என்ஜினியரிங் படித்து வருகிறார்.. இவருடைய தாத்தா வீடு எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தில் உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, நாமக்கல் பஸ் ஸ்டாண்டு எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் சிக்கன் பார்சல்களை வாங்கியிருக்கிறார்.

சண்முகநாதன்: இதனை சாப்பிட்ட பகவதியின் 72 வயது தாத்தா சண்முகநாதனும், அம்மா நதியாவும் மயங்கி விழுந்துள்ளனர்.. நதியா அந்த பொட்டலத்தை திறந்ததுமே, ஏதோ வித்தியாசமான வாசனை வந்திருக்கிறது.. அதனால், கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு, மிச்சத்தை வைத்துவிட்டார்.. அதனால், உடனடியாக, தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்து, சிக்கன் ரைஸ் சாப்பிட வேண்டாம் என்றாராம். ஆனால், அதற்குள் சண்முகநாதன், பாதிக்குமேல் சாப்பிட்டுவிட்டார்..
உடனடியாக உடனே மயக்கமும், வாந்தியும் வந்துள்ளது.. நதியாவுக்கும் உடல்நலம் பாதித்துள்ளது.. இறுதியில், சண்முகநாதனும், நதியாவும், நுரை தள்ளிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 2 பேருமே சீரியஸாக இருந்திருக்கிறார்கள்.. 2 பேருக்குமே செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சண்முகநாதன் இறந்துவிட்டார்..
சிக்கன் ரைஸ்: இதற்குநடுவில், செவ்வாய்க்கிழமை அந்த ஓட்டலில் 80 சிக்கன் ரைஸ் மேல் விற்கப்பட்டுள்ள நிலையில், நதியா, சண்முகநாதனுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், விசாரணை தீவிரமானது.. இறுதியில், சண்முகநாதன் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் ஆய்வு செய்ததில், பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
பார்சலை வாங்கிதந்த பகவதியிடமே நாமக்கல் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.. அப்போதுதான் பகவதியின் கிரிமினல் வேலை அம்பலமானது. பகவதியின் தவறான நடவடிக்கைகளை குடும்பத்தினர் கண்டித்ததால், ஆத்திரமடைந்து சிக்கன் ரைஸில் விஷம் கலந்ததாக வாக்குமூலம் தந்துள்ளார் பகவதி.
பகவதி: அதாவது, பேரன் பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துவந்ததாம்.. இந்த விஷயம் தாத்தா சண்முகத்துக்கு தெரியவந்துள்ளது.. அதனால், பேரனை கண்டித்திருக்கிறார்.. எக்காரணம் கொண்டும் கள்ளக்காதலை கைவிட முடியாது என்று தாத்தாவிடம் உறுதியாக சொல்லியிருக்கிறார் பகவதி.. இதனார், தொடர்ந்து பேரனுக்கு அட்வைஸ் தந்தபடியே இருந்தாராம் சண்முகம்.
இப்படி தன்னை தொடர்ந்து கண்டித்ததால் சண்முகம் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியிருக்கிறது.. உடல்நலம் பாதிக்கப்பட்ட அம்மா நதியாவுக்கு தீவிர சிகிச்சை நடக்கிறதாம்..
கலெக்டர் உமா: இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு, மாவட்ட கலெக்டர் உமா, நேரடியாகவே கிளம்பி மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.. நடந்தது என்ன என்று பகவதியிடம் விசாரித்தார்.. ஆனால், சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால்தான் அவர்களுக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக கலெக்டரிடமே பொய் சொல்லி நாடகமாடியிருக்கிறார் பகவதி..
அதுமட்டுமல்ல, மொத்தம் 6 பேருக்கு சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கியிருக்கிறார் பகவதி.. தன்னுடைய தம்பி, பாட்டி, சித்தி, அவருடைய 2 குழந்தைகள் என அனைவருக்குமே பார்சல் வாங்கியிருக்கிறார். இதில், தன்னுடைய அமமாவுக்கும், தாத்தாவுக்கும் மட்டும் விஷம் கலந்து தந்துள்ளார்.. மற்றவர்களுக்கு இந்த சிக்கனைதான் சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் இன்னொரு பார்சலை, தன்னுடைய நாய்க்கு வாங்கி போட்டுள்ளார்.
முறைதவறிய உறவு: தாத்தாவும், அம்மாவும் மட்டுமே தன்னுடைய முறைதவறிய உறவை கண்டித்து வந்தார்களாம்.. அந்த பெண்ணுடன் பழகக்கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தார்களாம்.. எனவே, அவர்களுக்கு விஷம் கலந்ததாக போலீசில் சொல்லியிருக்கிறார்.. என்ஜினியரிங் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட சகவாசத்துக்காக, இந்த சின்ன வயதிலேயே சேலம் சிறையில் அடைபட்டு போனார் 20 வயது பகவதி...!!












Click it and Unblock the Notifications