பல்லிளிக்குது பள்ளிப்பாளையம்.. 1 கிட்னி ரூ.10 லட்சம்? நாமக்கல் மக்களின் வயிற்றில் அடித்த அரசியல்வாதி
நாமக்கல்: நாமக்கல் விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை பேரம் பேசி திமுக நிர்வாகி விற்பனை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம், பெரும் பரபரப்பை தந்து வருகிறது.. பள்ளிப்பாளையம் அருகே, விசைத்தறி தொழிலாளர்களை குறி வைத்து மீண்டும் கிட்னி விற்பனை நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து, போலீசார் மற்றும் சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகளின் விசாரணையும் துரிதமாகியிருக்கிறது..கிட்னி விற்பனை சம்பவம், அரசியலிலும் எதிரொலித்து, கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. என்ன நடக்கிறது நாமக்கல் மாவட்டத்தில்?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த குமாரபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.. இவர்கள் போதுமான வருமானமின்றி தவித்து வருவதாக தெரிகிறது.

மூளைச்சலவை - பரிதாப தொழிலாளர்கள்
10 வருடங்களாகவே, இவர்களை மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனை நடந்து வந்துள்ளதாக தெரிகிறது.. தற்போது பள்ளிப்பாளையத்திலும் அந்த விற்பனை சூடுபிடித்துள்ளது..
இந்நிலையில்தான், அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த கிட்னி புரோக்கர் ஒருவர், பணத்தேவையால் சிரமப்பட்டு வரும் தொழிலாளர்களிடம் மூளைச்சலவை செய்து, கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும்; இதில் கூறிய பணத்தை தராமல் மோசடி செய்ததாகவும், வாட்ஸ்அப் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் 2 நாட்களுக்கு முன்பு பகீர் தகவல் பரவியது.
பின்னர் தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி,அவர்களிடமிருந்து சிறுநீரகத்தை 5 முதல் 10 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்வதாக, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் பரபரப்பு ஒன்று அளிக்கப்பட்டது..
தாசில்தார் சிவக்குமார்
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், குமாரபாளையம் தாசில்தார் சிவகுமார், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிப்பாளையம் போலீசார், அன்னை சத்யா நகர் பகுதியில் நேரடியாகவே சென்று விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணை நடத்தியதில் இதில் புரோக்கராக செயல்பட்டது, ஆலாம்பாளையம் பேரூரை சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது.
பள்ளிபாளையம் ஒன்றிய திமுகவில், ஆலாம்பாளையம் பேரூர் கழக பேச்சாளராக ஆனந்தன் பொறுப்பு வகித்து வருபவராம்.. அடிக்கடி கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றியதாக தெரிகிறது.. தற்போது இவரது பெயர் அடிபடவும், ஆனந்தன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டாராம்.. எனவே அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2 பெண்கள் யார்
இதுகுறித்து, மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் சொல்லும்போது, "பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியில் கிட்னி மோசடி நடப்பதாக தகவல் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட, கிட்னி புரோக்கர் ஆனந்தன் வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், 2 நாட்களாகவே ஆனந்தன் வீட்டிற்கு வராதது தெரியவந்தது.
மேலும், திருப்பூரில் அவரது குடும்பத்தினர் வசிப்பதாகவும், ஆனந்தனை பார்க்க அடிக்கடி சிலர் வந்து சென்றதாகவும், 2 பெண்களிடம் கிட்னி விற்பனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் மூலம், ஆனந்தன் மீது புகார் தரப்பட்டுள்ளதால், அது தொடர்பான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
கதையளந்து கொண்டிருக்கிறார் முதல்வர்
இதனிடையே, நாமக்கல்லில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. ரூ.1 லட்சத்திற்காக சிறுநீரகத்தையே மக்கள் விற்கத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது? என்பதை புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்..
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளது, தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications