Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் 4ம் தேதி 4 பேரும்.. பித்து பிடிக்க வைத்த விளையாட்டு.. கரூர் ரோட்டில் ஓடிய வங்கி அதிகாரி

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் அருகே காணாமல் போன வங்கி அதிகாரியை கடந்த 2 நாட்களாகவே போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.. அத்துடன், 50 லட்சம் கடனுக்கு உள்ளான குடும்பத்தில், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களும் வெளியாகியிருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்த பிரேம்ராஜ்-க்கு 38 வயதாகிறது.. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் வங்கியில், இன்சூரன்ஸ் பிரிவில் வேலைபார்த்து வருகிறார். மனைவி பெயர் மோகனபிரியா.. இந்த தம்பதிக்கு பிரணிதா (6) என்ற மகளும், பிரணித்(2) என்ற மகனும் உள்ளனர்.

Namakkal Bank Officer Karur

வாடகை வீடு

இவர்கள் குடும்பத்துடன் நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள பதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் வீட்டுக்குள் மோகனபிரியா மற்றும் அவரது 2 குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர்.. இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார் விரைந்து வந்து, சடலங்களை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

அத்துடன் பிரேம்ராஜ் எழுதிவைத்திருந்த கடிதத்தையும் கண்டெடுத்தனர். "ஆன்லைன் ஆப் மூலம் எங்களுக்கு இந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த கடனை எப்படி கட்டுவது என்றே தெரியவில்லை. அதை வெளியே சொல்ல தைரியம் இல்லாததால் 4 பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள்" என எழுதியிருந்தார்.

ஸ்விட்ச் ஆப்

இதையடுத்து, பிரேம்ராஜின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவரை தேடி கொண்டிருக்கிறார்கள். 4 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லிவிட்டு, பிரேம்ராஜ் மட்டும் எங்கே தலைமறைவாக உள்ளார்? என்ற விசாரணை ஆரம்பமானது.

அதுமட்டுமல்ல, தாயும், 2 குழந்தைகளும் தூக்கில் தொங்கியதற்கான அடையாளங்கள் தென்படுகிறதாம்.. அவர்களது கழுத்தில் தூக்கு மாட்டி இறந்ததற்கான காயங்களும் இருப்பதாக போலீசார் சொல்கிறார்கள். வீட்டிலுள்ள துணிகளும் கலைந்து கிடந்தன..

பிரேம்ராஜ் எங்கே

ஒருவேளை, கடன் தொல்லையால் கணவன் மாயமான நிலையில், குழந்தைகளை கொன்றுவிட்டு, மோகனபிரியா தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ? என்ற சந்தேகமும் எழுகிறது. எனினும் பிரேம்ராஜை தீவிரமாக கடந்த 2நாட்களாக தேடிவந்தனர். ஆனால், பிரேம்ராஜூம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரூர் மற்றும் வெள்ளியனை ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் அமராவதி ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.. மோகனப்பிரியா, அவரது மகள் பிரினித்தி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், 2 வயது குழந்தை பிரினிராஜை கழுத்தை நெரித்து கொன்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

போஸ்ட் மார்ட்டம்

இதுகுறித்து நாமக்கல் போலீசார் சொல்லும்போது, ரயில் முன் பாய்ந்து பிரேம்ராஜ் உயிரிழந்துள்ளார்.. அவரது உடல் இன்று கரூரில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் உயிரிழந்துவிட்டதால், குழந்தையை கழுத்தை நெரித்தது யார் என்பது தெரியவில்லை. ஆன்லைனில் ரூ.50 லட்சம் பணத்தை இழந்த சோகத்தில் தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் முடிவை, கடந்த 4ம்தேதி அதிகாலையிலேயே 4 பேரும் சேர்ந்து எடுத்துள்ளனர். ஆனால் 2 வயது குழந்தையை தூக்கில் மாட்ட முடியாததால், கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் முடிந்ததும், 3 பேரின் உடல் உறுப்புகளும் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கடுமையான மன அதிர்ச்சி

வீட்டில் 3 பேருமே இறந்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான், பிரேம்ராஜ் வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்.. வீட்டின் கதவையும் பூட்டாமல், வீட்டில் எல்லாரும் இருப்பது போல காட்டி கொண்டு வெளியேறியுள்ளார். கடுமையான மன அதிர்ச்சியில் இருந்த பிரேம்ராஜ் அன்று மாலை கரூர் சென்று, பல இடங்களில் ரோட்டிலேயே சுற்றித் திரிந்துள்ளார்.. அன்று இரவுதான் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+