7 வயது சிறுமியை சீரழித்த கட்டிட தொழிலாளி கைது - திரண்ட பொதுமக்கள்! நாமக்கல்லில் நடந்தது என்ன?
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 7 வயது சிறுமி, கட்டிட தொழிலாளி ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த கொடூர இளைஞரை தூக்கில் போட வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேக்கரி தொழிலாளி ஒருவரின் 7 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் காணாமல் போனார். நீண்ட தேடுதலுக்கு பிறகு மீண்டும் சிறுமி வீட்டுக்கு வந்தபோது, அழுதுகொண்டே வந்துள்ளார். அவரது உடையில் ரத்தக்கறை இருந்துள்ளது. அவரது உடலில் மாற்றங்கள் இருந்ததை பெற்றோர் கவனித்துள்ளனர். இதனையடுத்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியை மருத்துவர் பரிசோதித்ததில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை கொடுத்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்ததில் சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதற்குள் இந்த தகவல் குமாரபாளையம் நகரம் முழுவதும் பரவியதால் குமாரபாளையம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கானோர் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குமாரபாளையம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விமலா தலைமையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் குமாரபாளையம் பகுதியில் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போலீசார் நிச்சயமாக குற்றவாளிக்கு நீதிமன்ற விசாரணையின் முடிவில் தூக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என தெரிவித்தும் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசாரின் உதவியுடன் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களை அப்புறப்படுத்தியதுடன் கலைந்து செல்லாமல் மீறினால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெண்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் என்றும் குமாரபாளையத்தில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. குற்றவாளியின் பாதுகாப்பை கருதி போலீசார் வழக்கு விசாரணைக்காக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
அதனை தொடர்ந்து குற்றவாளி மணிகண்டனின் மீது கடத்தல், கொலை மிரட்டல், விடுத்தல், பாலியல் சீண்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்லில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு , உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக உலக மகளிர் தினத்தன்று, அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது. ஸ்டாலின் அரசின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டால், சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் எங்கும் பாதுகாப்பு இல்லை.
இப்படி ஒரு கேவலமான ஆட்சிக்கு பொறுப்பான நீங்கள், எந்த முகத்தை வைத்துக் கொண்டு மக்களிடம் இன்னொரு முறை ஆட்சி செய்ய கேட்கிறீர்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? ஒரு 7 வயது சிறுமிக்கு தெருவில் பாதுகாப்பு இல்லாத ஆட்சிக்கு, "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற வெற்று விளம்பரம் ஒரு கேடா? குமாரபாளையம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், அப்பச்சிளம் குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவும், ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்?












Click it and Unblock the Notifications