300 ஆடு.. விடிய விடிய ஆட்டுக்கறி விருந்து.. முதல்முதலாக "பெண் ஆடு".. ஆச்சரியத்தை கிளப்பும் நாமக்கல்
நாமக்கல்: 300 ஆட்டுக்கிடாய்களை வெட்டி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்ற விழா ஒன்று நாமக்கல்லில் நடந்து, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ளது மலையாம்பட்டி கிராமம். இந்த பகுதியில் மலையாள தெய்வம் உள்ளது.,, வருடந்தோறும் இங்கு ஆடிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்..

கர்ப்பிணிகள்: இதற்கு ஒரு காரண கதையும் சொல்லப்படுகிறது... போத மலைப்பகுதியில் 250 வருடங்களுக்கு முன்பு, பொங்களாயி என்ற பெண் வாழ்ந்து வந்தாராம்..
கடந்த 200 வருடங்களுக்கு மேலாகவே இப்படியான திருவிழாவும், அதையொட்டிய விருந்தும் நடத்தப்படுவது வழக்கம்.. அவர், கர்ப்பிணியாக இருக்கும்போது, பிரசவத்திற்காக கீழே இறங்கி வந்தாராம்.. அப்போது பெண்கள் யாருமே அவருக்கு உதவி செய்யவில்லையாம். இதனால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாம்.
உடனே, அந்த பொங்களாயி, இந்த பகுதி மக்களுக்கு சாபம் தந்துவிட்டு மறைந்துவிட்டாராம்.. அதனால்தான், இந்த பகுதிகளில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டதாகவும், அதன் பிறகு இங்குள்ள ஆண்கள் மட்டும் ஒன்று சேர்ந்து, நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, இப்படியான விழாவை பொங்களாயிக்கு நடத்துவதாகவும் சொல்கிறார்கள்.
நோய்நொடிகள்: இப்படி விழா எடுத்தபிறகு, மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதாம். அதுமட்டுமல்ல, இப்படி நேர்த்திக்கடன் செலுத்துவதால், இதன் மூலம் நோய் நொடி நீங்குவதுடன், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.. குடும்ப பிரச்சனைகள் தீருவதுடன், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்..
அதனால்தான், பெண்கள் பயன்படுத்தும் பொருளை கூட, இந்த விழாவில் ஆண்கள் பயன்படுத்துவதில்லையாம்.. அதேபோல, இந்த கோவில் பொருட்களை பெண்கள் தொடவும் மாட்டார்களாம். எந்த ஒரு காரணத்திற்காகவும், பெண்களும் இந்த விழா நடக்கும்போது அந்த பகுதிக்கு வரமாட்டார்களாம். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளதால், ஆண்கள், குழந்தைகள் மட்டுமே இதில் பங்கேற்பார்கள்.
தடபுடல் விருந்து: மலையாம்பட்டி கிராமம் போதமலை அடிவாரத்தில், ஆலமரத்தடியில் உள்ள மலையாள தெய்வம் பொங்களாயி அம்மனுக்கு இந்த திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு விருந்துடன் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்மக்கர்த்தாக்கள் செய்வது வழக்கம்.
அந்தவகையில் கடந்த 21-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு, திருவிழா ஆரம்பமானது.. அன்றுமுதல், பொங்களாயி அம்மனுக்கு, ஒவ்வொரு நாளும் மலர்களால் அலங்கரிக்கபட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.. நேற்றிரவும், சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து தடபுடல் விருந்து ஆரம்பமானது.

காளியம்மன்: இரவு 12 மணிக்கு பெங்களாயி அம்மன்கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன், இண்டங்காட்டு கருப்பசாமி போன்றவைகளுக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. அன்னதானத்துக்காக, வழங்கப்பட்ட 12 மூட்டை பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரானது. இதற்கு பிறகு, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள், தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவதற்காக ஆடுகளை கொண்டு வந்து பலியிட்டனர்..
இந்தமுறை, முதன்முதலாக "பெண் ஆடு" பலியிடப்பட்டதாம். இதற்கு பிறகுதான், ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிட்டு பூஜை நடந்துள்ளது.. கிட்டத்தட்ட 300க்கு மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
தொடர்ந்து இரவு விருந்து சமையல் தயாரானது. பெரிய பெரிய பாத்திரங்களில் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டது. அந்த ஆட்டுக்கறியை பொங்கல் சாதத்துடன் சேர்த்து இன்று காலை பரிமாறப்பட்டது. முதலில் மலை சாதி சமூகத்தை சேர்ந்த பூசாரிகள் பொங்கல் வைத்து பூஜை செய்தார்.
புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்தூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் என அனைவருமே விழாவில் பங்கேற்றனர்.
அசைவ அன்னதானம்: மேலும், வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி போன்ற பகுதிகளை சேர்ந்தோருக்கு அசைவ அன்னதானம் தரப்பட்டது..
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications