குட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்!

கொலை வழக்கில் இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்-வீடியோ

    நாமக்கல்: லாஸ்ட் பஸ் மிஸ் பண்ணியதால், ஷோபனா சுரேஷின் பைக்கில் வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் இவர் கழுத்தை நெரிக்க, அவர் கழுத்தை இவர் நெரிக்க என்றாகி கடைசியில், ஷோபனாவின் கழுத்தை சுரேஷ் நெரித்து குட்டையில் வீசியதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த தம்பதி செந்தில் - ஷோபனா. இவர்களுக்கு 11 வயதில் தேவா, 4 வயதில் சச்சின் என்ற மகன்கள் உள்ளனர். ஷோபனாவுக்கு 29 வயதாகிறது.. திருச்செங்கோட்டில் ஒரு பியூட்டி பார்லரில்10 வருடமாக வேலைபார்த்து வந்துள்ளார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தேவாவுக்கு பிறந்த நாள். அதனால் புது துணி வாங்க வெளியே சென்ற ஷோபனா நைட் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. பிறகு கணவருக்கு போன் செய்த ஷோபனா, கடைசி பஸ்ஸை விட்டுட்டேன்.. அதனால ஃபிரண்ட் கூட காரில் வந்து வீட்டில் இறங்கிடுறேன்" என்று சொன்னார்.

    குட்டை

    குட்டை

    ஆனால் நடுராத்திரி ஆகியும் ஷோபனா வீட்டுக்கு வராததால், பதறிய கணவர் மொளசி போலீஸில் புகார் தரவும், பிறகுதான், புள்ளியம்பாளையம் ரோட்டோரம் கிடந்த ஒரு குட்டையில் கண்டெடுக்கப்பட்டது. கழுத்தில் நகைகள் அப்படியே இருந்தன.. அதனால் இது திருட்டுக்காக நடந்த கொலை இல்லை என தெரியவந்தது.

    ஷோபனா

    ஷோபனா

    போஸ்மார்ட்டம் செய்யப்பட்டதில் பலாத்காரமும் செய்யப்படவில்லை, ஆனால் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என ரிப்போர்ட் வரவும் பாலியல் கொலையும் இல்லை என்று முடிவானது. இதன்பிறகு,ஷோபனாவின் செல்போனை ஆராயவும்தான் சுரேஷ் என்பவன் சிக்கினான்.. போலீசாரிடம் தந்த வாக்குமூலம் இதுதான்:

    6 மாச பழக்கம்

    6 மாச பழக்கம்

    ஷோபனா வேலை பார்த்த பியூட்டி பார்லர் கட்டிடத்துக்கு மேல்மாடியில்தான் நான் என் ஆபீஸ் இருக்கு. போர்வெல் ஆபீஸ் வெச்சிருக்கேன். எங்களுக்குள் 6 மாச பழக்கம்தான். இருந்தாலும் நாங்கள் எல்லை மீறிவிட்டோம். ஆனால் எனக்கு வேறு நிறைய பெண்களுடன் நட்பு இருக்கிறது. இது ஷோபனாவுக்கு பிடிக்கவில்லை. அதனால், என்னிடம் அடிக்கடி இதை பற்றி சண்டை போட்டார்.

    சண்டை

    சண்டை

    போன 19-ம் தேதி மகனுக்கு பர்த்டே சாக்லேட், துணிகளை வாங்கி கொண்டு வந்த ஷோபனாவை நான்தான் பைக்கில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு அழைத்து போனேன். அப்பவும், இதே பெண்கள் விஷயத்தை எடுத்து வைத்து கொண்டு வழியெல்லாம் ஷோபனா என்னிடம் சண்டை போட்டுக் கொண்டே வந்தார். அதனால் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, நான் ஷோபனாவை அடிக்க பாய்ந்தேன்.

    மரவள்ளிக்கிழங்கு காடு

    மரவள்ளிக்கிழங்கு காடு

    ஆனால் ஆவேசமாக இருந்த ஷோபனா, என் கழுத்தை நெரிக்க பார்த்தார். உடனே நான் ஷோபனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து, சடலத்தை அருகில் இருந்த குட்டையில் வீசிட்டேன்.. குழந்தைக்காக வாங்கின புது டிரஸ், சாக்லட்டுகளை மரவள்ளிக் கிழங்கு காட்டுக்குள் வீசிட்டேன்" என்றார். இதையடுத்து, சுரேஷை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+