“விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே தவெக கூட்டணியில் இணைய முடியும்” - செங்கோட்டையன்
நாமக்கல்: "தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். 2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம்" என செங்கோட்டையன் தெரிவித்துர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியின் ஆலோசனைக் கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயர்மட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

திருச்செங்கோட்டில் இன்று பேசிய செங்கோட்டையன், "அதிமுகவில் இருந்து மட்டுமல்ல, திமுகவில் இருந்தும் தவெகவில் இணைகிறார்கள். NDA கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் களம் என்பது எப்படி செல்லும் என யாராலும் ஊகிக்க முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தவெகவிற்கு போட்டி என யாரையும் சொல்ல முடியாது. மக்கள் சக்தி இருக்கிறது. போட்டி என தனிப்பட்ட முறையில் யாரையும் சொல்ல முடியாது, மக்கள் சக்தியால் விஜய் முதல்வர் ஆவார். தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு விஜய்யை விட்டால் யாருமில்லை. இளைஞர்களைத் தட்டியெழுப்பும் ஆற்றம் விஜய்க்கு மட்டுமே இருக்கிறது.
2026 மே மாதம் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் விஜய் என்ற வரலாற்றை படைப்போம். தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் என ஏற்றுக்கொள்பவர்களால் மட்டுமே கூட்டணியில் இணைய முடியும். இதுவே நமது லட்சியப் பயணம். சேர வேண்டிய இடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன்" என செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்செங்கோடு சட்டசபை தொகுதி தவெக வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தேர்வாகி இருக்கிறார் என்றும் அவரை இன்று தவெக தலைமை வேட்பாளராக அறிவிக்கும் என்றும் தகவல்கள் பரவின. இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருச்செங்கோட்டில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "வெற்றிவாகை சூடப்போகும் நமது வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் மட்டுமே அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிவிப்பு குறித்துப் பரவி வரும் தகவல் உண்மையில்லை. தற்போது நடைபெற்று வருவது தொகுதிவாரியான மற்றும் பூத் வாரியான பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் மட்டுமே. வேட்பாளர் அறிமுகம் குறித்த தகவல், முறைப்படி தலைவர் விஜய்யால் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும். சரியான நேரத்தில் சரியான வேட்பாளர்களை விஜய் களமிறக்குவார்." எனத் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவத்திற்கு பின் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிறுத்திய தவெக தலைவர் விஜய், இரண்டு மாதங்களுக்கு பிறகு அண்மையில் புதுச்சேரியில் திறந்தவெளியில் மக்கள் சந்திப்பை நடத்தினார். வரும் டிசம்பர் 18ஆம் தேதி ஈரோட்டில் விஜய் மீண்டும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்!












Click it and Unblock the Notifications