நாமக்கல் கல்லூரி மாணவர்கள் இறந்துட்டாங்களா? வதந்தி பரப்பிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது நாமக்கல் மாவட்ட காவல்துறை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் விடுதிகளில் தங்கி படித்து வந்த மொத்தம் 128 மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக கல்லூரி மருத்துவ மையம் மற்றும் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அனைத்து மாணவர்களும் வெளநோயாளிகளாகச் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளனர் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்புத் துறையினர் விடுதியில் நடத்திய ஆய்வில், சமையல் கூடத்தின் பராமரிப்பில் குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக, தண்ணீர் சேமிப்பு தொட்டிகள் முறையாகச் சுத்தம் செய்யப்படவில்லை என்றும், குடிநீர் சுத்தகரிப்பு (RO) அமைப்பும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உணவு மற்றும் குடிநீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சமையல் கூடம், தண்ணீர் சேமிப்பு மற்றும் குழாய் அமைப்புகளைச் சீரமைக்க கல்லூரி நிர்வாகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், அங்கு உணவு சாப்பிட்டு சிகிச்சையில் இருந்த 5 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக சில சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக தவெக சமூக ஊடக அணி பொறுப்பாளர் போக்கிரி விக்டர் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். இதன் உண்மை தன்மை தெரியாமல் ஏராளமானோர் ரீ-ட்வீட் செய்தனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் பரப்பப்படும் தகவல் வதந்தி எனவும் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. இரு நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட 128 மாணவர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பிவிட்டனர் என்றும், மாணவர்கள் உயிரிழந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்ற வதந்திகளே. பொதுமக்கள் இது போன்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமாரபாளையம் தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது நாமக்கல் மாவட்ட காவல் துறை.

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.
மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு "Pokkiri Victor (@Pokkiri_Victor)" மற்றும் "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications