“இந்த மாதிரி ஏடிஎம்களை தான் குறி வச்சிருக்காங்க.. உடைக்க ஈஸியாம்”.. நாமக்கல் எஸ்.பி கூறிய ஷாக் தகவல்
நாமக்கல்: "சில குறிப்பிட்ட ஏடிஎம்களை குறி வைத்துத்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஏடிஎம்களை எளிதாக கொள்ளை அடிக்க முடிவதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அந்த ஏடிஎம்களை நிர்வகிக்கும் வங்கிகளுக்கு அலர்ட் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார் நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணன்.
கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் , கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட கார் , கொள்ளையடித்த பணம் உள்ளிட்டவற்றை ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் தப்பி வந்துவிட்டனர். அந்த கொள்ளையர்கள் பற்றி தமிழக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், சினிமா பாணியில் நாமக்கல் தேசிய நெடுசாலையில் குமாரபாளையம் அருகே அந்த கண்டெய்னரை போலீசார் மடக்கி பிடித்தனர். வெப்படை அருகே, கொள்ளையர்களை பிடிக்க முயல்கையில் நடந்த என்கவுண்டரில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தான். இன்னொருவருக்கு காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, கோவை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொள்ளையர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த கும்பலுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏ.டி.எம் கொள்ளை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையர்கள் பற்றிய பல்வேறு தகவல்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் பேசுகையில், "இந்த கொள்ளை கும்பலில் மொத்தம் 60 - 70 பேர் செயல்பட்டு வருகின்றனர். திருடுவதில் கைதேர்ந்த 6 பேரை அந்த கும்பல் தேர்வு செய்து வெல்டிங் செய்ய ஒருவர், ஓட்டுநர் என குழுவாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த கும்பல் முதலில் நோட்டமிட்டு இடத்தை தேர்வு செய்து, பின்பு திட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஏ.டி. எம்.மிஷினை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மிஷின், வெல்டிங் ராட், மின்சாதன உபகரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 2 பேர் விமானத்திலும், 3 பேர் காரிலும், 2 பேர் கண்டெய்னரிலும் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் ஒன்று கூடிய பிறகுதான் கன்டெய்னர் மூலம் அவர்கள் அனைவரும் திருச்சூருக்கு கொள்ளையடிக்கச் சென்றுள்ளனர். கூகுள் மேப் மூலம் அருகில் உள்ள ஏடிஎம்களை அடையாளம் கண்டு அங்கு சென்று நோட்டமிட்டு, கொள்ளையடித்துள்ளனர்.
திருச்சூரில் கொள்ளை அடித்துவிட்டு இதுபோன்ற வாகனங்களில் வருவதாக கேரளா போலீஸ் மூலம் தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வாகனங்களை நிறுத்தி விசாரித்து வந்தோம். பலரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்த கண்டெய்னர் சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றதால் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தோம்.
ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய் 67 லட்சத்தை கைப்பற்றி உள்ளோம். ஏடிஎம்களில் மொத்தம் எவ்வளவு கொள்ளை போனது என அந்தந்த மாநில போலீசார் கூறினால் தான் தெரியவரும். இந்த வழக்கில் சிக்கியுள்ள கொள்ளையர்கள் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு மாநிலத்தில் வழக்கு உள்ளது.
தமிழக ஏடிஎம் மையங்களில் சிசிடிவி, அலாரம் சிஸ்டம் உள்ளிட்டவை முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதில் சந்தேகம் உள்ளது. அடிக்கடி வந்து பராமரிப்பு செய்யப்படுகிறதா என்ற கேள்வி உள்ளது. ஏடிஎம் மையங்களில் செக்யூரிட்டி போட சொல்லி இருக்கிறோம்.
சில ஏடிஎம்களில் குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. முறையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர பராமரிக்கப்படாத ஏடிஎம்களை குறிவைத்துத்தான் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுபோன்ற ஏடிஎம்களில் பாதுகாப்பை அதிகரிக்க, நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
சில குறிப்பிட்ட ஏடிஎம்களை குறி வைத்துத்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அதனை இப்போது சொல்ல முடியாது. குற்றவாளிகள் சொன்ன வாக்குமூலத்தின் படி அந்த ஏடிஎம்களை எளிதாக கொள்ளை அடிக்க முடிவதாக சொல்லி இருக்கிறார்கள். அந்த ஏடிஎம்களை நிர்வகிக்கும் வங்கிகளுக்கு அலர்ட் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications