"நீட்டை ரத்து செய்ய முடியாதாம்.. ஸ்டாலினே சொல்கிறார்.." திடீரென கோபப்பட்ட எடப்பாடி பழனிசாமி
நாமக்கல்: ராசிபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக, இன்று நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என சொல்வதாகச் சாடினார். மேலும், தனது பிரச்சாரத்திற்குக் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டதாகவும் அவர் சாடினார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் என்றாலும் இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியாக செல்லும் எடப்பாடி பழனிசாமி, தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அதன்படி இன்று அவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார். மாலை அங்கு மழை பெய்த நிலையில், அதற்கு நடுவில் தான் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களிடம் பேசினார்.
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் பேசிய அவர், "இப்போது திடீரெனத் தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன் என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், ஏற்கனவே திமுகவால் தமிழ்நாடு தலைகுனிந்துவிட்டது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்து தமிழ்நாட்டையே திமுகவினர் தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்கே தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர். அவர்கள் செய்த செயலால் தமிழ்நாடே தலை குனித்து நிற்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன. ஆனால், ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்ட ஒரு அரசு திமுக அரசுதான்.
லஞ்சம்
இந்த விடியா ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. எங்குப் பார்த்தாலும் லஞ்சம் தான். அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை கூட கிடைப்பதில்லை. இதற்கு சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட 37 பெண்களே சாட்சி! சிகிச்சைக்காகச் சென்ற கர்ப்பிணிப் பெண்களுக்குத் தவறான ஊசி செலுத்தியதில் சிக்கலாகியிருக்கிறது. அந்தத் துறையின் அமைச்சர் மாரத்தான் ஓடுகிறாரே தவிர.. மருத்துவமனைகளைக் கவனிப்பதில்லை.
நான் இன்று 154ஆவது தொகுதியாக ராசிபுரத்தில் மக்களைச் சந்தித்து வருகிறேன். மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு இருப்பதைப் பார்த்து ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது. அதனால் தான் சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் எடப்பாடி போகிறார் என்கிறார். நான் பஸ்ஸை எடுத்ததில் உங்களுக்குத் தூக்கம் போய்விட்டது என்பதே உண்மை.
பிங்க் பஸ்
மேலும், பிங்க் பஸ்ஸில் வந்து என்னை முந்திச் செல்வேன் என்கிறார் உதயநிதி. பிங்க் பஸ் எப்படி இருக்குனு உங்க எல்லாருக்கும் தெரியும்! மழை பெய்தால் ஒழுகுகிறது.. மேற்கூரை காற்றடித்தாலே பறக்குது. இப்படித் தான் சென்னையில் பெண் ஏறியபோது ஃபுட் போர்டு அப்படியே உடைந்து விழுந்தது. அப்படிப்பட்ட பஸ்ஸில் வந்து நம்மை பிடிப்பாராம். அதெல்லாம் நடக்காது. பிங்க் பேருந்தின் நிலையில் தான் திமுக கட்சியின் நிலையும் உள்ளது.
நீட் தேர்வு ரத்து
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார் ஸ்டாலின்.. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து என்றெல்லாம் சொன்னார். நீட் தேர்வை ரத்து செய்தாரா? இப்போது கேட்டால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். நீதிமன்றத்தைக் காட்டி கைவிரிக்கிறார். இதைத் தான் நாங்களும் சொன்னோம். அப்போது பொய் வாக்குறுதியைச் சொன்ன திமுக, இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
அன்று பிரச்சாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என உதயநிதி சொன்னார். அந்த ரகசியம் என்ன ஆனது.. குறைந்தது அந்த ரகசியம் என்ன என்றாவது சொன்னாரா? ஸ்டாலினே இனிமேல் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்று சொல்லிவிட்டார். இனி என்ன பொய் சொல்லப் போகிறார்கள்" என்றார்.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி












Click it and Unblock the Notifications