தாலி கட்டிய அடுத்த விநாடியே.. ஓங்கி ஒரு அடி.. பொறி கலங்கி தடுமாறி போன மாப்பிள்ளை..!
மணமகனை கன்னத்தில் அறைந்து தாலியை வீசியெறிந்துள்ளார் மணமகள்
நாமக்கல்: தாலி கட்டின அடுத்த செகண்டே மாப்பிள்ளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் கல்யாண பொண்ணு! அத்துடன் தாலியை கழற்றி எறிந்து வீசிவிட்டு வேகவேகமாக நடந்து சென்றுவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சார்ந்தவர் விஜி. இவர் ஒரு கூலித் தொழிலாளி.

இவருக்கும், ராசிபுரம் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் கல்யாணம் செய்து வைக்க இரு வீட்டிலும் முடிவு செய்தனர். இதற்கான நிச்சயமும் கொஞ்ச நாளைக்கு முன்பு நடந்தது.
இன்று இவர்களுக்கு கல்யாணம்.. அங்குள்ள சோமேஸ்வரர் கோயிலில் திருமண ஏற்பாடுகள் அமர்க்களமாக இருந்தது.. சொந்தக்காரர்கள், நண்பர்கள் என ஊரே திரண்டு கோயிலில் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் கல்யாணம் நடந்தது.
மணமகளுக்கு தாலி கட்டினார். வந்திருந்தவர்கள் எல்லாம் மணமக்களுக்கு பூ தூவி அட்சதை போட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் மணமகன் விஜி, மணமகள் நெற்றியில் பொட்டு வைக்க போனார். அப்போது திடீரென விஜியின் கையை கல்யாண பொண்ணு தட்டிவிட்டார்.
இதனால் எதுவும் புரியாமல் விஜி திருதிருவென விழிக்க.. அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார்.. பிறகு அப்போதுதான் கட்டி முடித்த தாலியை எடுத்து வீசியெறிந்தார்.. யாரை பற்றியும் கவலைப்படவில்லை.. இரு வீட்டாரும் கடுமையான அதிர்ச்சியில் உறைய.. வேகவேகமாக கோயிலிலை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதைபார்த்த அர்ச்சகர், எல்லாரையும் வெளியேற சொல்லி விட்டு, கோயிலை பூட்டிவிட்டு புறப்பட்டு போய்விட்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் போய் இதை பற்றி முறையிட்டனர்.
அப்போதுதான் விஷயம் வெளிப்பட்டது... கல்யாண பெண்ணுக்கு மனநல பாதிப்பு இருக்கிறதாம்.. இந்த கல்யாணத்துலயும் இஷ்டம் இல்லையாம்! கடைசியில், வேற ஒரு சொந்தக்கார பெண்ணை பார்த்து விஜிக்கு கல்யாணம் முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications