விசிக - நாம் தமிழர் கூட்டணி? திருமாவை முதல்வராக்குவோம் - டோன் மாறிய சீமான்! எல் முருகனுக்கு பதிலடி
நாமக்கல்: திருமாவளவன் முதல்வராகும் கனவு பலிக்காது என சொல்வதற்கு எல் முருகன் யார்? திருமாவளவன் முதல்வர் ஆவதை வரவேற்கிறேன். அதற்கு அவருக்கு தகுதி உள்ளது. இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. அவரை எப்படியாவது முதல்வர் ஆக்குவோம். எல் முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா?’’ என பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர் எல் முருகன். இவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையின் மத்திய இணை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னை எழும்பூரில் எல் முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக எல் முருகன் கூறியதாவது:
சமூக நீதி பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி பற்றி அம்பேத்கர் கூறியது என்னவென்றால் கடைக்கோடி மக்களுக்கும் இடஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான். ஆனால் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலவராக இருக்க முடியும்? எப்படி அவர் தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்?
அவரது கட்சி ஒரு சிறியது. அவரை அந்த அமைப்புக்கான தலைவராக தான் நான் பார்க்கிறேன். திருமாவளவனின் முதல்வராகும் கனவு எல்லாம் பலிக்காது’’ என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்தும் மறுபரிசீலனை செய்யவும் திருமாவளவன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் எல் முருகன் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் தான் எல் முருகனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி நாமக்கல்லில் சீமான் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதை வரவேற்கிறேன். அதற்கு அவருக்கு தகுதி உள்ளது. இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது. அவரை எப்படியாவது முதல்வர் ஆக்குவோம். எல் முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வர் ஆக முடியாதா ?
திருமாவளவனின் முதல்வராகும் கனவு பலிக்காது என சொல்வதற்கு எல்.முருகன் யார்? உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் முதல்வராக விட மாட்டீர்களா? இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம். தனித்து நிற்க தி.மு.க.,வுக்கு தைரியமில்லை. என்னை பார்த்து தி.மு.க., பயப்படுகிறது. விஜய் கட்சியை பார்த்தும் பயப்படுகிறது’’ என விளாசியுள்ளார்.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications