தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!
நாமக்கல்: தேர்தல்களில் இலவசங்கள் கூடாது என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இப்படி இருக்கையில், அக்கட்சியின் நிர்வாகி அருண்ராஜ் படம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட இருந்த சில்வர் பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இலவசங்கள் கூடாது என்று நீட்டி முழங்கிவிட்டு, இப்படி சில்வர் டப்பா கொடுப்பதெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தவெகவினரே கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இலவசங்களின் அவசியம்
இலவசங்கள் என்பது, பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கும் மக்களை, பொது நீரோட்டத்துடன் கலக்க செய்வதற்காகத்தான். இலவச லேப்டாப்களும், பேருந்து பயண அட்டையும் கிராமப்புறத்தில் இருந்த வரும் மாணவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொடுக்கப்படுகிறது. இந்த இலவசங்கள் சில நேரங்களில் இருக்கப்பட்டவர்களுக்கும் சென்று சேர்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஏன் முக்கியம்?
ஆனால், அதற்காக ஒட்டுமொத்த இலவசங்களையும் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழுந்திருக்கிறது. இருப்பினும் தவெக போன்ற அரசியல் கட்சிகள் இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றன.
மடைமாற்றும் அரசியல் கட்சிகள்
இப்படி பேசி வரும் கட்சிகள், மறுபுறம் இலவச திட்டங்களை அறிவித்திருக்கின்றன. விஜய் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது, பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்கள், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, மற்றும் திருமண உதவி உள்ளிட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அது மிகப்பெரிய விமர்சனங்களாக வெடித்திருந்தது.
வசமாக சிக்கிய தவெக
இப்போது அக்கடச்சியின் நிர்வாகியாக உள்ள அருண்குமார், இதேபோன்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அதாவது, அவரது புகைப்படங்கள் அச்சிடப்பட்ட சில்வர் டப்பாக்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இந்த சில்வர் டப்பாக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications