மனித கடல் நடுவே குபீர்னு மேலே வந்த விஜய்.. வேனில் பார்த்ததுமே துள்ளிய நாமக்கல் மக்கள்! கலக்கல் கரூர்
நாமக்கல்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நாமக்கல்லில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.. நாமக்கல்- சேலம் ரோடு கேஎஸ் தியேட்டர் மெயின்ரோடு பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, நாமக்கல் பிரச்சாரத்தை சற்று தாமதமாகவே விஜய் துவங்கினார்.. இந்த பிரச்சாரம் முடிந்ததுமே கரூரிலும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் செய்துள்ளனர்.
விரைவில் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறார்.. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

சனிக்கிழமை விஜய் பிரச்சாரம்
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தன்னுடைய பயண திட்டத்தை மேற்கொண்டு வருகிறார் விஜய்.. அந்தவகையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி சுற்று பயணத்தை திருச்சியில் ஆரம்பித்தார். பிறகு கடந்த சனிக்கிழமை அரியலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று பொது மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் 27ம் தேதி சனிக்கிழமை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்..
நாமக்கல் தவெக கூட்டம்
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.. குறிப்பாக., விஜய்யின் பிரச்சார வாகனத்தை பின் தொடரக்கூடாது.. விஜய்யின் பிரச்சார வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும். பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்க வேண்டும்.. நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது உள்ளிட்ட 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், பொய்யேரி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மதுரை வீரன் கோவில் அருகே, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அனுமதியும் போலீசாரிடம் முன்கூட்டியே கேட்கப்பட்டது.
ஆனால் அங்கே கூட்டத்தை நடத்தினால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் அவதியை தந்துவிடும் என்று சொல்லி, போலீசார் அந்த இடத்தை அனுமதிக்கவில்லை.. இதையடுத்து, நாமக்கல்லில் கே.எஸ்.திரையரங்கம் அருகில் காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சாலையெங்கும் உற்சாக வரவேற்பு
இதற்காக இன்று அதிகாலை முதலே நாமக்கல் மாவட்டத்தில் தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்களும் கட்டுக்கடங்காமல் குவிய துவங்கினர்.. வழக்கம்போல் பெண்களும் அதிக அளவில் பிரச்சார இடத்துக்கு வந்துள்ளனர்..
இந்த நாமக்கல் பிரச்சாரத்துக்காக, சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்டு தனி விமானம் மூலம் திருச்சிக்கு 9.30 மணிக்கு வந்தார்.. பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டார்.. இதனால் விஜய் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்க துவங்கிவிட்டனர்.. விஜய்யும் மக்களை பார்த்தப்படி கையசைத்துக் கொண்டே பிரச்சார இடத்துக்கு வந்து, தன்னுடைய உரையை துவங்கினார்.
8. 45 மணிக்கு நாமக்கல்லில் பேசுவதாக அறிவிக்கப்பட்டது.. ஆனால், வீட்டிலிருந்து கிளம்பியதே 8.45 மணிக்குதான் என்கிறார்கள்.. எனினும் 4 மணி நேர தாமதத்தை பொருட்படுத்தாமல் மக்கள் விஜய்க்காக காத்து கிடந்தனர்.
கரூரில் தவெக தலைவர்
அதேபோல கரூர் மாவட்டத்திலும் தவெக தலைவர் பிரச்சாரம் இன்று மேற்கொள்கிறார்.. இதற்காக கரூர் பஸ் ஸ்டாண்டு ரவுண்டானா, லைட்ஹவுஸ் கார்னர், 80 அடி சாலை, வேலுச்சாமிபுரம், வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகில் என 6 இடங்களில் அனுமதி கேட்டும் காவல்துறை மறுத்துவிட்டது.
நகரின் முக்கிய பகுதிகள் என்பதுடன் சனிக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் போலீசார் மேற்கண்ட இடங்களில் அனுமதி தரவில்லை. இறுதியில் கரூரில், வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட போலீஸ் தரப்பிலும் பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர் டூ நாமக்கல்
நாமக்கல் நகரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, முதலைப்பட்டி பைபாஸ் சாலை வழியாக கரூர் செல்வதாக தெரிகிறது.
ஏற்கனவே 4 மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துள்ளார் விஜய்.. 4 மாவட்டங்களிலுமே விஜய்க்கான கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.. எனவே இன்றைய தினமும் நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது. அதேசமயம், இன்று விஜய் என்ன பேசப்போகிறார்? என்பது குறித்த ஆர்வம் அனைத்து தமிழக அரசியல் கட்சிகளிடமும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications