நாமக்கல்லில் விஜய்.. இதை கவனிச்சீங்களா? நான்கு முக்கியமான பாயிண்ட்ஸ்! லைனுக்குள் வரும் தவெக

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: மாவட்ட வாரியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். இந்த கூட்டத்திற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவெகவினர் மேற்கொண்டிருந்தனர்.

குறிப்பாக காவல்துறையினரின் அறிவுறுத்தல்கள் முடிந்த அளவுக்கு முழுமையாக பின்பற்றப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் தவெகவினர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Vijay Tamilaga Vetri Kazhagam

பொது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், போக்குவரத்து இடையூறுகளை தவிர்ப்பதற்கும், போலீசார் வழங்கிய அறிவுறுத்தல்களை இந்த பிரச்சாரத்தின் போது தவெகவினர் கறாராக கடைபிடித்து இருந்தனர். குறிப்பாக விஜய் வாகனத்திற்கு பின்னால் கட்டுப்பாடு இல்லாமல் அணிவகுத்து வரும் பைக்குகளை தடுத்திருந்தனர். மேலும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கின்றனர். அதேபோல பாதுகாப்பு காரணங்களுக்காக பிரச்சார நேரமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

விழாக்கோலம் பூண்ட நாமக்கல்

பிரச்சாரத்தில் விஜயை பார்க்க அவரது பேச்சைக் கேட்க கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக மக்கள் திரண்டு இருந்தனர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மக்கள் அதிக அளவில் கூடியதால், நாமக்கல் முழுக்கவே விழாக்கோலம் பூண்டிருந்தது. இதன் காரணமாகவே விஜய் பிரச்சார இடத்திற்கு வருவதற்கு நேரம் தாமதமானது.

அட்வைஸ் கொடுத்த நிர்வாகிகள்

பிரச்சாரக் கூட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டாம் என்றும், வீட்டிலிருந்து தொலைக்காட்சி மூலம் விஜயின் உரையை கேட்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதேபோல விஜயை பார்க்கக் கூடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு அத்தியாவசிய சேவைகளை தடுக்கக்கூடாது, குறிப்பாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு ஒதுங்கி வழி விட வேண்டும் என்றும், விளக்கு கம்பங்கள் அல்லது மரங்களில் ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தவெகவினர் அறிவுறுத்தியிருந்தனர்.

நீதிமன்றம் கொடுத்த அறிவுரைகள்

பிரச்சாரத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, ஆதரவாளர்களிடையே முன்கூட்டியே நிர்வாகிகள் பேசி இருந்தனர். பட்டாசு வெடிக்க கூடாது சண்டை சச்சரவுகள் கூடாது என்பது இந்த பேச்சுவார்த்தையின் போது அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தவெகவினர் இவ்வாறு அறிவுறுத்தியதற்கு காரணங்கள் இருக்கின்றன. அதாவது, விஜய் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை என்று தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உரிய நிபந்தனைகளுடன் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் ஆனால், நிபந்தனைகளை தவெகவினர் கடைப்பிடிப்பதில்லை என்றும் காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி சில முக்கியமான விஷயத்தை கூறியிருந்தார். அதாவது பிரச்சார பயணத்தின்போது சேதம் அடையும் பொது சொத்துகளுக்கு உண்டான தொகையை, கட்சியினரே செலுத்த வேண்டும் என்றும், அதை காவல்துறை தவறாது வசூலிக்க வேண்டும் என்றும், கர்ப்பிணிகள் வயதானவர்கள் பிரச்சார கூட்டத்திற்கு வர வேண்டாம் என்று கூறி, விஜய் ஏன் மற்ற கட்சி தலைவர்களுக்கு முன்மாதிரியாக ஏன் இருக்கக் கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று தவெகவினர் சில விஷயங்களை பின்பற்றியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+