சூரஜுக்கு நாங்க அனுமதி சீட்டு கொடுக்கல.. எப்படி உள்ள வந்தாரு?.. தவெக அருண்ராஜ் பரபரப்பு
நாமக்கல்: சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில தொழிலாளி ஒருவர் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த சூரஜுக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை என்றும், அதையும் மீறி அந்த இளைஞர் எப்படி உள்ளே வந்தார் என்றும் தவெக நிர்வாகி அருண்ராஜ் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
இதுகுறித்து, குமாரபாளையத்தில் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் புதிய வளாகம் திறக்கப்பட்டு மூன்று மாதங்களாகி இருக்கின்றன. மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் பிரசவப் பகுதி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பச்சிளங்குழந்தைப் பிரிவும் இருந்திருக்க வேண்டும். அப்போது தான் பச்சிளங் குழந்தைகளுக்கு தேவையான அரவணைப்பும், பாலூட்டும் வசதியும் ஏற்படுத்தி தர முடியும். ஆனால், தரைத்தளத்தில் மற்றொரு கட்டடத்தில் இந்த பிரிவு உள்ளது.

என்ஐசியூ வசதி
இதனால், பிரசவமான தாய்மார்கள் சுகப்பிரசவமாக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் சரி கீழே நடந்து சென்று மற்றொரு வளாகத்திற்குச் சென்று தான் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பிரசவித்த தாய்மார்களுக்கு ரத்தப்போக்கு இருக்கும், அனிமிக்காக இருப்பார்கள், பிபி போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
அந்த சூழ்நிலையிலும் கூட அவர்கள் அங்கு நடந்து சென்றாலும், படுப்பதற்கு ஏற்ற இட வசதி அங்கு இல்லாததால் தரையிலேயே படுக்கச் சொல்கின்றனர். புதிய வளாகத்தில் பிரசவ அறை அருகிலேயே என்ஐசியூ வசதியை திட்டமிட்டிருந்தாலும் அது இன்னும் செயல்படுத்தவில்லை. அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.
மகளிருக்கு ரூ.5 ஆயிரம்
முதல்வர் 5 ஆயிரம் ரூபாய் அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையைப் போல, தமிழக வெற்றிக் கழகத்துக்கு நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவு பெருகி வரும் நிலையில், ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக பெண்களைக் கவர வேண்டுTVம் என்பதற்காக உதவித்தொகையை அறிவித்துள்ளனர்.
ஒருவிதத்தில் முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தான். பெண்களுக்கு இந்த உதவித்தொகை பெரிய உதவியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றக் கருத்தும் இல்லை. பிப்ரவரி, மார்ச், ஏப்ரலுக்கும், கோடை சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாயும் அளித்துள்ளார். அடுத்த நிதியாண்டுக்கு எப்படி சட்டப் பேரவையின் அனுமதி இல்லாமல் அரசு செலவு செய்கின்றனர்.
சேலம் சூரஜ் உயிரிழப்பு
அறிவிப்பு இல்லாமல் மக்களுக்கு பணம் போய் சென்றுவிட்டது. இதனை எப்படி செய்திருக்கின்றனர். செயலாளர் கட்டாயமாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும். இது பெரும் கேள்வியாக உள்ளது. சேலத்தில் சூரஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்தது தொடர்பான கேள்விக்கு, பல பேர் கூட்டத்திற்கு வர வேண்டும், தலைவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டாலும் இந்த இளைஞருக்கு பாஸ் கொடுக்கப்படவில்லை.
6 மாதத்துக்கு முன்பே சூரஜுக்கு ஆஞ்சியோ செய்து ஸ்டண்ட் வைத்துள்ளனர் என்பதை தெரிந்து தவெக நிர்வாகிகள் அவருக்குப் பாஸ் கொடுக்கப்படவில்லை. ஆனால், அதையும் மீறி காவல் துறையினரே அவரை அனுமதித்துள்ளனர். ஒவ்வொருவராக பாஸ் செக் செய்தே காவல் துறையினர் அனுமதித்திருக்கிறார்கள். அதையும் மீறி அந்த இளைஞரை ஏன் உள்ளே அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.
சூரஜுக்கு உடனடி முதலுதவி
கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே அந்த இளைஞருக்கு நெஞ்சுவலி, படபடப்பு போன்றவை ஏற்பட்டுள்ளது. முதலுதவியாக மெடிக்கல் கேம்புக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. உடனடியாக நாங்கள் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலமாக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இருந்தாலும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மீண்டும் பொதுமக்களிடம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உடல்நிலை சரியில்லாதவர்கள், முதியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் கூட்டத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள். அவர் பாஸ் கேட்டும் கொடுக்கவில்லை. அவர் அனுமதிக்கப்பட்டது பெரிய தவறுதான்.
அவருக்கான நிவாரணம் வழங்குவது குறித்து மாவட்டச் செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். சேலம் கூட்டத்தில் போதிய வசதிகள் இருந்தது. முதலுதவி கட்சியின் மருத்துவக் குழு மூலமே அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வேண்டாம் என்று கூறியும் அவர் வந்துள்ளார் என்று கூறினார்.
-
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
திருத்தணியில் தவெக வேட்பாளருக்கு வந்த தனிமை கொடுமை.. விஜய் கட்சியில் தெறித்து ஓடும் நிர்வாகிகள்? -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
பெரம்பூரில் மூடிக் கிடக்கும் விஜய் தேர்தல் அலுவலகம்.. இவ்வளவுதான் தவெக தேர்தல் ஏற்பாடு! -
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக்












Click it and Unblock the Notifications