Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாஜி அமைச்சர் வீட்டில் திடீரென புகுந்த லஞ்ச ஒழிப்புத்துறை.. நாமக்கல் மாவட்டத்தில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டிற்கு மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வந்ததால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர்கள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், தங்கமணி எனத் தொடங்கி சமீபத்தில் ஆர்.காமராஜ் ஆகியோர் வீடு வரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

தங்கமணி வீட்டில் ரெய்டு

தங்கமணி வீட்டில் ரெய்டு

தங்கமணி அமைச்சராக இருந்தபோது மின்சாரத் துறையில் முறைகேடு நடைபெற்றதாகவும், நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டப்படாத 2.16 கோடி பணம், வங்கி லாக்கர் சாவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

மீண்டும் ரெய்டு

மீண்டும் ரெய்டு

மேலும் இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், பள்ளிப்பாளையத்தில் இருக்கும் தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமார் அலுவலகம் உள்ளிட்ட 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போதும் மடிக்கணினிகள், ஹார்டு டிஸ்குகள், தங்கமணி தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 இன்று தங்கமணி வீட்டில்

இன்று தங்கமணி வீட்டில்

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கோவிந்தபாளையம் வீட்டிற்கு இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக வந்தனர். இதனால் மீண்டும் ரெய்டு நடத்தப்படுமா என பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது புதிதாக ரெய்டு நடத்தப்படவில்லை. அங்கு கடந்த ஆண்டு சோதனையில் கைப்பற்றப்பட்ட சொத்துகள், ஆவணங்கள் பற்றி விசாரித்து அவற்றை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சொத்து ஆவணங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அளவிடும் பணிகள்

அளவிடும் பணிகள்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தங்கமணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். மேலும் நில அளவிடும் பணியிலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இடத்தின் மதிப்பு, எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்த நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவில் பரபரப்பு

அதிமுகவில் பரபரப்பு

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கமணி வீட்டைச் சூழ்ந்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+