பல வருடங்களாக தலைவர்கள் செய்ய முடியாததை.. 24 மணி நேரத்தில் சாதித்த டிரம்ப்.. இத்தனை மாற்றங்களா!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான உத்தரவுகளை முடிவுகளை கடந்த 24 மணி நேரத்தில் எடுத்துள்ளார். பல நாட்டு தலைவர்கள்.. ஏன் அமெரிக்காவின் தலைவர்களே கடந்த பல ஆண்டுகளாக செய்ய முடியாததை கடந்த 24 மணி நேரத்தில் செய்து முடித்து உள்ளார் டொனால்ட் டிரம்ப். டிரம்ப் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகளை இங்கே பார்க்கலாம்.
1. பனாமா, மெக்சிகோ முடிவு:
மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே 3 நாடுகளின் முக்கிய பகுதிகளை கைப்பற்றும் விதமாக அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு சிறப்பு அதிகாரிகளை வழங்கும் சட்டத்தை கொண்டு வர அவரின் குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 3 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

அதன்படி குடியரசு கட்சியின் பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீன் (மெக்ஸிகோ வளைகுடாவை "அமெரிக்கா வளைகுடா" என்று மறுபெயரிட வேண்டும்.. இதற்கான அதிகாரத்தை டிரம்பிற்கு அளிக்க வேண்டும் என்று மசோதா கொண்டு வந்தார். குடியரசு கட்சியின் பிரதிநிதி டஸ்டி ஜான்சன் பனாமா கால்வாயை அமெரிக்கா வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதுவும் டிரம்பிற்கு பனாமா கால்வாயை விலை பேசும் அதிகாரத்தை வழங்கும்.
2. அத்துமீறியவர்கள் வெளியேற்றம்:
தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள். இவர்களை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளாராம்.
3. மொத்தம் 2 பாலினம்தான்:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 3ம் பாலினத்திற்கும், LGBTQ பிரிவினருக்கும் எதிராக அடிக்கடி கருத்து தெரிவிக்க கூடியவர். அந்த வகையில் அவர் தற்போது எடுத்துள்ள முடிவு ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதன்படி FBI அமைப்பில் இருக்கும் பாலின, இன ரீதியிலான துறையை மூட முடிவு செய்துள்ளார். இந்த FBI பிரிவில் பாலின ரீதியிலான குற்றங்கள், இன அதாவது கறுப்பின, வெள்ளையின ரீதியிலான குற்றங்களை மட்டும் விசாரிக்கும். இதை நீக்க முடிவு செய்துள்ளார். அதேபோல் இரண்டு பாலினம் மட்டுமே உள்ளது.. அமெரிக்காவில் மற்ற பாலினங்களுக்கு அனுமதி இல்லை என்று அதை குற்றமாக்கி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
4. போதைப்பொருள் கொள்ளையர்களுக்கு செக்:
போதைப்பொருள் கடத்தல்காரர்களை பயங்கரவாத அமைப்புகளாக முறையாக அறிவித்துள்ளார். இதன் மூலம் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இனி தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்படுவர்.
5. தணிக்கை அமைப்புகளுக்கு செக்:
நாட்டின் தணிக்கை அமைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் யாரும் என்ன கருத்தும் தெரிவிக்கலாம். இனி பொது ஊடகங்களில் யாருடைய கருத்தும் தணிக்கை செய்யப்படாது என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
6. நீதிபதிகள் நீக்கம்:
அமெரிக்க நீதித்துறையில் இருக்கும் நீதிபதிகள், நீதிமன்ற குழுவில் இருக்கும் நீதிபதிகள் அல்லாத வேறு சில அதிகாரிகளை டிரம்ப் நீக்க உள்ளாராம். 5-6 பேர் வரை நீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இவர்களின் லிஸ்ட் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இவர்கள் எல்லோரும் அமெரிக்காவை பூர்வீகமாக கொள்ளாதவர்கள். வேறு வேறு நாட்டில் இருந்து ஆவணங்கள் இன்றி அமெரிக்கா வந்தவர்கள். ஆவணங்கள் இன்றி வந்து பின்னர் பல வழிகளில் இவர்கள் குடியுரிமை பெற்றவர்கள். முறையான ஆவணங்களோடு வந்து பின்னர் குடிமகன்கள் ஆனவர்கள் அல்ல. இவர்களை டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இந்த நிலையில்தான் அது போன்ற பின்புலம் கொண்டவர்களை நீக்கி டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
7. குடியுரிமை நீக்கம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதாக உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுக்க பல நாடுகளில் உள்ள நடைமுறையை அமெரிக்கா கைவிடுவதாக அறிவித்து உள்ளது. பொதுவாக ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அது அந்த நாட்டு குடிமகனாக மாறும். அதாவது ஆட்டோமேட்டிக் குடியுரிமை என்று இதை அழைப்பார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். அமெரிக்காவில் இந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தைதான் டிரம்ப் நீக்குவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடைப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமெட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார். அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த முதல் நாளே அதை நடைமுறை படுத்தி உள்ளார்.
8. உலக சுகாதார மையத்தில் இருந்து வெளியேற்றம்:
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதன் உறுப்பு நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
கொரோனா காலத்தில் தவறாக நடந்து கொண்டது, கொரோனாவின் சோர்ஸை விசாரிக்காதது, சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட பல காரணங்களை குறிப்பிட்டு உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் நேற்று பல உத்தரவுகளை பிறப்பித்தார். கிட்டத்தட்ட 200 முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் ஒரு பகுதியாக உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. ஒரு பக்கம் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டே.. இன்னொரு பக்கம் இதற்கான ஆவணங்களில் டிரம்ப் கையெழுத்து போட்டார்.
9. மரண தண்டனை உறுதி:
நாடு முழுக்க விஷ ஊசிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்.. தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கொடுங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வான பின் பல்வேறு முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் பிறப்பித்த 200 உத்தரவுகளில் தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவும் ஒன்று. அதன்படி ஒரு குற்றவாளி மரணதண்டனைக்கான குற்றத்தை செய்து இருந்தாலோ.. அல்லது அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ளவர்கள் பெரிய குற்றங்களை செய்து இருந்தாலோ அந்த குற்றத்திற்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்.
இது போன்ற தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டிய குற்றங்களுக்கு கண்டிப்பாக தூக்கு தண்டனை கொடுங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். ஒவ்வொரு கவுண்டியிலும் உள்ள விதிப்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அந்த விதிகளை பின்பற்ற வேண்டாம்.. எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் தூக்கு தண்டனை கொடுக்கலாம். இதற்காக நாடு முழுக்க விஷ ஊசிகளை தயார் நிலையில் வைத்திருங்கள் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
10. எரிபொருள் உற்பத்தி:
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீண்டும் கச்சா எண்ணெய் வர்த்தகம், பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளார். பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது.
இந்த உடன்படிக்கையில் பிடன் கையெழுத்திட்ட காரணத்தால் அமெரிக்காவில் பல இடங்களில் சிஎன்ஜி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கச்சா எண்ணெய் இறக்குமதி, ஏற்றுமதியும் குறைக்கப்பட்டது. இதற்கு பதிலாக இவி வாகனங்கள் களமிறக்கப்பட்டன.
ஆனால் டிரம்ப் இது இரண்டையும் நிராகரித்து உள்ளார். டிரம்ப் உத்தரவின் பெயரில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. அதோடு கச்சா எண்ணெய், சிஎன்ஜி ஆலைகளை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதோடு சிஎன்ஜி எடுக்க ஊக்குவிக்கப்படும், ஏற்கனவே மூடப்பட்ட கிணறுகள், ஆலைகளை அரசு மீண்டும் திறக்கும் என்று கூறி உள்ளார்.
-
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
Greenland: கிரீன்லாந்தை பாதுகாக்க நாங்க தயார்.. டிரம்ப் விலைக்கு கேட்டு வந்த நிலையில் ஈரான் அதிரடி! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications