கொரோனாவுக்கு டாடா பைபை காட்டிய 103 வயது பாட்டி.. ஜில்லான பீர் குடித்து செம அட்டகாசம்!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க மூதாட்டி ஒருவர், பீர் குடித்து கொண்டாடியிருக்கிறார்.
நியூயார்க்: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்த 103 வயது அமெரிக்க மூதாட்டி ஒருவர், அந்த மகிழ்ச்சியை குளுகுளு பீர் குடித்து கொண்டாடியிருக்கிறார்.
உலகமே இன்று கொரோனா வைரஸ் எனும் ராட்சசனின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் 200 நாடுகளை பதம் பார்த்துவிட்டது.
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

முதியவர்களை தாக்கும் கொரோனா
கொரோனா தொற்று வயதானவர்களை தான் அதிகம் பாதித்து வருகிறது. இந்நோய்க்கு முதியவர்கள் தான் அதிகம் பலியாகி வருகின்றனர். எனவே வயதானவர்கள் கவனமாக இருக்கும்படி மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

பாட்டிக்கு கொரோனா
இந்த சூழலில் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த 103 வயது மூதாட்டி ஜெனி ஸ்டெனாவுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்தது.

மீண்டெழுந்த பாட்டி
இதையடுத்து அவரது உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து, இறுதி மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினர். ஆனால் அந்த மூதாட்டியின் தன்னம்பிக்கை அவரை கொரோனாவின் பிடியில் இருந்து மீட்டுக்கொண்டு வந்துவிட்டது. மூன்று வார சிகிச்சைக்கு பிறகு ஜெனி பாட்டி இப்போது பூரணமாக குணமடைந்துவிட்டார்.
Recommended Video

குளுகுளு பீர்
எமன் வீட்டு வாசலை எட்டிப்பார்த்துவிட்டு திரும்பியிருக்கும் ஜெனி பாட்டியை நினைத்து, அவரது பிள்ளைகளும், பேரன், பேத்திகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே அவர் ஆசைப்பட்டு கேட்ட குளுகுளு பீரை வாங்கிக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர். பாட்டியும் அந்த ஐஸ் பீரை அசால்டாக குடித்துவிட்டு, அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications