111 வருடத்திற்கு பின் காவு வாங்கிய டைட்டானிக்? கப்பலுக்கும் உள்ளே இருந்தவருக்கும் இப்படியொரு தொடர்பா

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி கடலில் மூழ்கி வெடித்து உள்ளது. அதன் சிதறிய பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

டைட்டன் நீர்மூழ்கியை தேடுதல் பயணத்தை இன்று அதிகாலை முடிப்பதாக அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.

 111 years after: Is the Wife of the Titanic Submarine pilot descended from people who died on the ship?

நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கப்பலின் பாகங்களை காட்டி அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து உறுதியாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலின் அருகிலேயே 1600 அடி ஆழத்தில் இந்த நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்.

காவு வாங்கி உள்ளது: டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.

ஸ்டாக்டன் ரஷ் என்பவர்தான் இந்த நீர்மூழ்கி கப்பலை ஓட்டிய பைலட் ஸ்டாக்டன் ரஷ். இவர் the OceanGate நிறுவனத்தின் சிஇஓவாகவும் இருக்கிறார். இவருக்கும் டைட்டானிக் கப்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

 111 years after: Is the Wife of the Titanic Submarine pilot descended from people who died on the ship?

1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் இந்த ஸ்டாக்டன் ரஷ்ஷின் மனைவியின் விண்டியின் தாத்தா இசடோர் ஸ்ட்ராஸின் மற்றும் விண்டியின் பாட்டி பயணம் செய்து மரித்து உள்ளனர். டைட்டானிக் கப்பலில் 1912ல் மரித்த இசடோர் ஸ்ட்ராஸின் கொள்ளுப் பேத்திதான் விண்டி. கப்பலில் மரித்த இந்த தாத்தா, பாட்டிகளின் மருமகன் ஸ்டாக்டன்தான் இப்போது மூழ்கி இருக்கும் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பைலட். பாருங்கள் மாமனார், மாமியார் டைட்டானிக் கப்பலில் பலியாக அவர்களின் பேத்தியின் கணவர் டைட்டானிக்கை பார்க்க போன டைட்டன் கப்பலில் பலியாகி உள்ளார்.

இதனால் 111 வருடங்கள் கழித்தும் டைட்டானிக் கப்பல்தான் இப்படி காவு வாங்குகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 1912ம் ஆண்டு டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 15ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள ஐஸ் பாறை ஒன்றில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கப்பலில் விழுந்த துளை காரணமாக மொத்தமாக கப்பலும் மூழ்கியது. 52,310 டன் எடை கொண்ட இந்த கப்பல் நியூயார்க் செல்லும் வழியில் கடலுக்குள் மூழ்கி மொத்தமாக அழிந்தது.

இந்த விபத்தில் மொத்தம் 1,504 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். மனித வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும். சர்வதேச அளவில் கடல் பயணத்தையே மாற்றியதுதான் டைட்டானிக் விபத்து. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளேது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது. இதை பார்க்க போய்தான் டைட்டன் கப்பல் காணாமல் போய் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+