13 வயது சிறுவன் "அப்பா" ஆன கதை.. மொத்த கோர்ட்டையும் மலைக்க வைத்த பொடியன்.. டீச்சருக்கு மானமே போச்சு
நியூயார்க்: 13 வயது சிறுவன், அப்பா ஆகிவிட்டார்.. அந்த குழந்தைக்கு இப்போது 5 வயதாகிவிட்டது.. சிறுவனுக்கு 19 வயதாகிவிட்டது. இப்போது மொத்த உண்மையும் வெளியே வந்து, அமெரிக்காவையே ஆடிப்போக வைத்து வருகிறது.. யாரந்த டீச்சர்?
அமெரிக்காவில் சவுத் ஜெர்ஸியிலுள்ள வாரிங்டன் என்ற பகுதியில் வசித்து வருபவர் லாரா கேரன்.. இவருக்கு இப்போது 34 வயதாகிறது.. கேப் மே கவுன்டி பகுதியில் செயல்பட்டு வரும், மிடில் டவுன்ஷிப் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

வகுப்பில் படித்து வந்த மாணவன் ஒருவனை, வீட்டுக்கு அழைத்து சென்று தன்னுடனேயே தங்க வைத்துக் கொண்டார் கேரன் டீச்சர்.. பிறகு, அந்த மாணவனுடன் பாலியல் உறவு கொண்டதில், கர்ப்பமானார்.
கேரன் டீச்சர்: அந்த குழந்தையையும் கேரன் டீச்சர் பெற்றுக் கொண்டார்.. தற்போது குழந்தைக்கு 5 வயதாகிறது.. இப்போது அந்த குழந்தையும், மாணவனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கிறார்கள்.. ஒருநாள் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தன்னுடைய ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளார் மாணவர்.
இந்த போட்டோவை மாணவனின் அப்பா பார்த்துவிட்டார்.. தன்னுடைய மகனுக்கும், அந்த குழந்தைக்கும் ஒரே முகஜாடை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.. இதனால், தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துகொள்வதற்காக, போலீசில் புகார் தந்தார். அந்த புகாரில், தன்னுடைய மகன், டீச்சர் கேரனின் மாணவர் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை: இதையடுத்து, தந்தையின் புகாரின்பேரில் விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான், டீச்சர் வீட்டில் தன்னுடைய மகனையும், மகளையும் தங்கிக் கொள்ள அனுமதி தந்ததே சிறுவனின் அம்மா என்பது தெரியவந்தது. ஆசிரியை என்ற முறையில்தான், தன்னுடைய 2 பிள்ளைகளையும் டீச்சர் வீட்டில் தங்குவதற்கு அனுமதித்ததாகவும், தன் மகனுக்கு அப்போது வெறும் 13 வயதுதான் ஆகியிருந்தது, கேரனுக்கு 28 வயதிருந்தது என்றும் போலீஸ் விசாரணையில், சிறுவனின் தாய் கூறினார்.
இதையடுத்து, சிறுவனின் சகோதரியிடம் போலீசார் விசாரித்தாரகள்.. அதற்கு அந்த பெண் போலீசாரிடம் சொல்லும்போது, "நாங்கள் டீச்சர் வீட்டில் தங்கியிருந்தபோது, நானும், என் சகோதரனும் ஒன்றாகத்தான் ஒரே படுக்கையில் படுப்போம். ஆனால், நான் தூங்கி விட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், டீச்சரின் படுக்கையில் என் சகோதரன் படுத்திருப்பான என்று சொல்லி, தன்னுடைய சகோதரனிடம் பாலியல் உறவில் டீச்சர் ஈடுபட்ட சம்பவங்களையும் ஒவ்வொன்றாக போலீசாரிடம் தெரிவித்தார்.
மாணவர் கவனம்: இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குழந்தை பிறந்ததுமே, அதை விழுந்து விழுந்து கவனித்தானாம் மாணவன்.. தன் சகோதரி அதே வீட்டில் இருப்பது தெரிந்தும், குழந்தை பிறந்தும்கூட, கேரனின் படுக்கையிலேயே தொடர்ந்து படுத்து தூங்கி வந்துள்ளான். இதுகுறித்த ஆவணங்கள் அனைத்தையுமே போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஆரம்பமானது.. அப்போது வழக்கறிஞர்களிடமும், போலீசாரிடம் மாணவன் சொல்லும்போது, அந்த குழந்தை தனக்கும், டீச்சருக்கும் பிறந்தது என்பதை ஒப்புக் கொண்டார். தனக்கு இப்போது 19 வயதாகிறதென்றும், வாரத்திற்கு 2 முறை கேரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினான்..
வாக்குமூலம்: மாணவனின் வாக்குமூலத்தையடுத்து, டீச்சர் கேரனை போலீசார் கைது செய்தனர்.. பாலியல் செயல்களுக்கு கட்டாயப்படுத்துதல், தூண்டப்பட்ட பாலியல் செயல்கள் மற்றும் சிறுவனின் நலனுக்கு தீங்கு ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கேரன் கைது செய்யப்பட்டு, ஜெயிலிலும் அடைத்தனர். டீச்சருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையும் நிலுவையிலேயே உள்ளது.. ஆனால், டீச்சர் அதற்குள் ஜாமீனில் நேற்று வெளியே வந்துவிட்டார்.. இந்த சம்பவம்தான் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications