அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்த முறைகேடு.. 185 தெலுங்கர்களை.. வேலையிலிருந்து தூக்கிய ஆப்பிள்
நியூயார்க்: ஆப்பிள் நிறுவனத்தில் நடந்த ஊழல் ஒன்று அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அங்கே 185 தெலுங்கு மொழி பேசும் (ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்) ஊழியர்களை ஆப்பிள் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி உள்ளது.
Bay Area அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை நீக்கி ஆப்பிள் நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது. Matching Grants program திட்டத்தில் தெலுங்கர்கள் முறைகேடு செய்த நிலையில் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

ஆப்பிள் நிறுவனம் ஒரு சிஎஸ்ஆர் திட்டத்தை நடத்தி வருகிறது. அதாவது தொண்டு வழங்குவதற்கான திட்டம் இது. இந்த திட்டத்தின் படி.. இப்போது ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் ஒரு அமைப்பிற்கு தொண்டு வழங்க நினைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அந்த பணத்தை தருவதற்கு பதிலாக ஆப்பிள் நிறுவனம் வழங்கிவிடும். ஒருவேளை நீங்கள் தொண்டு நிறுவனத்திற்கு பணம் கொடுத்துவிட்டால் அதை கணக்கு காட்டி ஆப்பிள் நிறுவனத்திடம் refund பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம் அந்த ஊழியர் வருமான வரி விலக்குகளை பெற முடியும். அதாவது நீங்கள் தொண்டு செய்யும் பணத்திற்கு வருமான வரி விலக்கு பெறுவீர்கள்.. தொண்டு செய்ய வேண்டிய தொகையை ஆப்பிள் நிறுவனமே தொண்டு செய்ய வேண்டிய அமைப்பிடமோ அல்லது உங்களிடமோ கொடுத்துவிடும். தொண்டு காரியங்களை ஊக்கப்படுத்தும் விதமாக இப்படி செய்துள்ளனர். தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே இப்படி நிதி தர முடியும்.
தெலுங்கு ஆப்பிள்:
ஆனால் தெலுங்கர்கள் இதை வைத்து முறைகேடு செய்துள்ளனர். இவர்கள் தெலுங்கு அமைப்பு ஒன்றிற்கு டொனேஷன் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த தொகையை ஆப்பிள் நிறுவனம் அந்த தெலுங்கு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளது. அதாவது நாங்கள் தெலுங்கு தொண்டு அமைப்பு ஒன்றிற்கு நிதி உதவி அளித்துவிட்டோம்.. அதற்கான ஆவணங்கள் இங்கே உள்ளது .. என்று கூறி ஆப்பிள் நிறுவனத்திடம் அதற்கான தொகையை வாங்கிக்கொண்டனர். ஒன்று.. இரண்டு அல்ல.. பல லட்சம் ரூபாயை இவர்கள் தொண்டாக வழங்கி உள்ளனர்.
இதுவரை ஊழல் எதுவும் நடக்கவில்லை. இதற்கு பின்தான் ஊழல். அந்த தெலுங்கு ஊழியர்கள் தெலுங்கு அமைப்பு ஒன்றிற்கு நிதி வழங்கியதாக கூறினார்களே. அந்த தெலுங்கு அமைப்பே அவர்களுக்கு சொந்தமானதுதான்.. அதாவது தங்களுடைய தொண்டு அமைப்பிற்கே நிதி உதவி தருவதாக கணக்கு காட்டி.. அந்த காசை இவர்களே கடைசியில் எடுத்துக்கொண்டு.. ஆப்பிள் வழங்கும் தொகையையும் எடுத்துக்கொண்டு.. வரி விலக்கையும் பெற்றுள்ளனர். பல லட்சங்களை இப்படி முறைகேடு செய்துள்ளனர்.
ஒருவர் இருவர் அல்ல.. மொத்தம் 185 தெலுங்கர்கள் இப்படி முறைகேடு செய்துள்ளனர். ஆப்பிள் நிறுவனம்.. என்ன திடீரென பல தெலுங்கு ஊழியர்கள் நிதி உதவி செய்கிறார்களே.. அதுவும் பல லட்சத்திற்கு எல்லாம் தொண்டு செய்கிறார்களே என்று சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் இந்த முறைகேடு அம்பலம் ஆகி உள்ளது. கணக்கு எடுத்து பார்த்ததில் எல்லாம் தெலுங்கு ஊழியர்கள்.. பணம் போனதெல்லாம் ஒரே நிறுவனத்திற்கு.. நிறுவனத்தின் பின்புலத்தை ஆய்வு செய்தால் அதை நடத்துவதும் அதே ஊழியர்கள்தான்.
இந்த திட்டத்தில் முறைகேடு செய்த 185 தெலுங்கர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். இதில் பலர் சீனியர் மேனஜர் பொறுப்பில் இருந்தவர்கள். இவர்களை பிளாக் லிஸ்ட் செய்யும் திட்டத்தையும் ஆப்பிள் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications