பவர்புல் தமிழர்கள்! அதிபர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில்.. கலந்து கொண்ட 4 வலிமைமிக்க தமிழர்கள்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட 4 சக்தி வாய்ந்த தமிழர்கள் கவனம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க அதிபராக இன்று டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவில்லை. ஆனால் இந்தியா சார்பாக முகேஷ் அம்பானி உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் மொத்தமாக 4 தமிழர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழர் 1 - அமைச்சர் ஜெய்சங்கர்:
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பயணத்தின் போது, அமெரிக்க நிர்வாகத்தின் புதிய பிரதிநிதிகளுடனும், புதிய அமைச்சர்களுடனும் ஜெய்சங்கர் சந்திப்பு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பார்க்க சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் மோடி சார்பாக கடிதம் ஒன்றை கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பர்சனலாக மோடி எழுதிய கடிதம் இது என்று கூறப்படுகிறது.
தமிழர் 2 - கமலா ஹாரிஸ்
தற்போது துணை அதிபராக உள்ள.. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த கமலா ஹாரிஸ் தமிழர். இவரும் நிகழ்வில் கலந்து கொள்கிறார். கமலா ஹாரிஸ் இந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் படுதோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் வாக்குகள் அடிப்படையில் கமலா ஹாரிஸ் 73,237,314 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இன்னொரு பக்கம் டிரம்ப் 76,133,250 வாக்குகள் பெற்றுது குறிப்பிடத்தக்கது. துணை அதிபர் என்ற முறையில் கமலா இன்று பதவி ஏற்பிற்கு செல்கிறார்.
தமிழர் 3: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இன்று நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
தமிழர் 4: விவேக் ராமசாமி கேரளா பூர்வீகம் என்றாலும் தமிழ் பின்புலத்தை கொண்டவர் . இவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமி மற்றும் கிரேட் எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்று அறிவித்தார். ஆனால் அரசாங்கத் திறன் துறையின் ("DOGE") தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒஹையோ கவர்னராக பொறுப்பேற்க விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் அந்த தேர்தலில் நிற்க உள்ளார். இதையடுத்தே DOGE குழு தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு கட்டணம்:
இந்த நிகழ்விற்காக 2,50,000 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்க அரசு வட்டார அறிக்கையின்படி, ஐந்து விதமான டிக்கெட் பேக்கேஜ்கள் வெளியிடப்பட்டு உள்ளன. $1 மில்லியன், $500,000, $250,000, $100,000 அல்லது $50,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த டிக்கெட்டுகளை காசிற்கு விற்பனை செய்யப்படாமல்.. டொனேஷன் என்ற அடிப்படையில் வழங்கப்படும். அதாவது டிரம்ப் அதிபர் தேர்தல் விவகாரங்களுக்கான டொனேஷன் என்ற அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படும். இந்திய மதிப்பில் இது 8 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications