ஈரானில் மாயமான 400 கிலோ யுரேனியம் எங்கே.. 10 அணு ஆயுதங்களை உருவாக்கலாம்.. அமெரிக்காவிற்கு ஷாக்
நியூயார்க்: ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா கடந்த ஞாயிறு அன்று வான்வழித் தாக்குதல் நடத்திய நிலையில்,அங்கிருந்து 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு மாயமாகிவிட்டது என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்சி கூறினார்.இந்த செறிவூட்டப்பட்ட 400 கிலோ யூரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என்றும் ஜேடி வான்சி ஏபிசி நியூஸிடம் தெரிவித்தார். குறிப்பாக 60 சதவீதமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஈரானின் முக்கிய தளங்களில் இருந்து தாக்குதலுக்கு முன்பே பாதுகாப்பாக கடத்தப்பட்டதாக நம்புகிறோம் என்றும் கூறினார்.
ஈரானின் அணு ஆயுதம் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகிறது. அணு ஆயுதங்களை ஈரான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தெரியாத நாடு என்று நம்பும் அமெரிக்கா, அது உருவாக்கும் அணு ஆயுதம் உலக நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சியது. அதேபோல் ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களின் இருத்தலுக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் தேதி திடீரென ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானின் அணு திட்ட கட்டமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் வசதிகள் சிறிய அளவில் சேதமடைந்தன.

இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் கடந்த 102 நாட்களாக தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மாறி மாறி நடத்தும் இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் ஈரானை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைத்து வந்தது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதால், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியது. அந்த நாட்டின் போர்டோ, நட்டான்ஸ், இஸ்பகான் ஆகிய 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது.
அமெரிக்காவின் பி-2 குண்டுவீச்சு விமானங்கள், 13,500 கிலோ எடை கொண்ட 'பங்கர் பஸ்டர்' எனப்படும் பதுங்கு குழி அழிப்பு குண்டுகளை வீசி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இந்த குண்டுகள் பூமிக்கு அடியில் 200 மீட்டர் ஆழத்தில் உள்ளவற்றையும் அழித்துவிடும். ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் மலையை குடைந்து மிகவும் ஆழத்தில் அமைக்கப்பட்டது ஆகும். எனவே அதை அழிக்க 'பங்கர் பஸ்டர்' குண்டுவை போட்டிருந்தது அமெரிக்கா. இந்த குண்டுவீச்சில் ஈரானின் மேற்படி அணுசக்தி தளங்கள் பெருத்த சேதத்தை சந்தித்தன. ஆனால் இதனால் அணுகசிவு இல்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்தது.
ஆனால் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு சுமார் 400 கிலோ அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் காணாமல் போனது என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸி கூறினார்.இந்த செறிவூட்டப்பட்ட 400 கிலோ யூரேனியம் மூலம் 10 அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என்றும் எச்சரித்தார். குறிப்பாக 60 சதவீதமாக செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஈரானின் முக்கிய தளங்களில் இருந்து தாக்குதலுக்கு முன்பே பாதுகாப்பாக கடத்தப்பட்டதாக நம்புகிறோம் என்றும் ஜேடி வான்ஸி கூறினார். மாயமான 400 கிலோ யுரேனியம் தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் வரும் வாரங்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறினார்.
அமெரிக்க தாக்குதல்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்திற்கு வெளியே 16 லாரிகளின் கான்வாய் இருப்பதைக் காட்டியது. இது ஒரு மலைக்குள் கட்டப்பட்ட ஒரு பெரிதும் பலப்படுத்தப்பட்ட தளம் ஆகும். இங்கிருந்து தான் யுரேனியத்தை ஈரான எடுத்து சென்றுவிட்டதாக அமெரிக்கா நம்புகிறது.












Click it and Unblock the Notifications