"ஆபத்து".. டிசம்பரில் நடக்க போகும் விநோதம்.. யாரு ஏலியன்களா.. நம்ம கிட்டயா.. "டைம் டிராவலர்" கணிப்பு
டிசம்பர் 8ம் தேதி வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் பேசுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது
நியூயார்க்: வரும் டிசம்பர் மாதம், மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ள ஒரு தகவல், சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
2 மாதங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர் பகீரை கிளப்பிவிட்டார்.. அவர் கியூபாவை சேர்ந்தவர்.. பெயர் மோனி விடன்ட்டே.. இந்த பெண்மணி கணித்து சொன்னது பலமுறை நடந்துள்ளது..
அந்தவகையில், மீண்டும் மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டிருந்தார்.. மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்..

பேராபத்து
9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, அமெரிக்காவுடன் நெருக்கமாக மற்றும் உலகத்தில் முன்னணி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்நாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியுள்ளார்...

நாஸ்டர்டாம்
சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்று மோனியின் கணிப்பு, உலக நாடுகளை கலங்கடித்து கொண்டிருக்கிறது.. ஆனால், இதுபோல் முன்கூட்டியே கணித்து சொன்ன பாபா வாங்கேவும், சில வருங்கால ஆபத்துகளை உணர்த்தி உள்ளதை மறுக்க முடியாது.. இப்போது இன்னொரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

டைம் டிராவலர்
எனோ அலரிக் என்ற ஒருவர் டிக்டாக்கில் மொத்தம் 5 கணிப்புகளை பகிர்ந்துள்ளார்... அதில், "டிசம்பர் 8ம் தேதி ஒரு மாபெரும் விண்கல்லில் வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள். மார்ச் 2023ல் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை 750 அடி மெகா சுனாமியை எதிர்கொள்ளும்.. அதேபோல சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவு இந்த காரணத்திற்காக பலரின் கவனத்தை ஈர்த்தது... டைம் டிராவலர் அதாவது காலப் பயணி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பூமியின் தலைவிதியை என்றென்றும் மாற்றும் 5 பேரழிவு சம்பவங்களை விரிவாக பதிவிட்டு இருந்தார்.

ஜாக்கிரதை
அந்த நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ஜாக்கிரதை.. ஆமாம், நான் 2671ம் ஆண்டு நிகழ்நேர பயணி.. வரவிருக்கும் இந்த 5 தேதிகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. 2671ம் ஆண்டை சேர்ந்ததாக சொல்லி, சில மாதங்களில் பூமி வேற்றுகிரகவாசிகளின் இருப்பை காணும்.. வேற்றுகிரகவாசிகள் டிசம்பர் 8, 2022 அன்று ஒரு பெரிய விண்கல்லில் பூமியில் தரையிறங்குவார்கள் என்று சொல்லி, அடுத்த 6 மாதங்களில் நடக்கும் மற்ற 4 நிகழ்வுகளையும் இவர் கணித்துள்ளார்.

வியப்பு 1
இதில் முதல் நிகழ்வு நவம்பர் 30ம் தேதி நடைபெறும்.. நவம்பர் 30ம் தேதி நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடிக்கும். அதன்பின் டிசம்பர் 8-ம் தேதி வேற்றுக்கிரகவாசிகள் பெரிய விண்கற்களுடன் பூமியை வந்தடைவார்கள். அடுத்த ஆண்டு, பிப்ரவரி 6 அன்று, இந்த பூமியில் இருந்து 4 இளைஞர்கள் ஒரு பழங்கால கட்டிடத்தின் இடிபாடுகள் மற்றும் ஒரு வேற்று கிரகத்திற்கு ஒரு போர்ட்டலை திறக்கும் ஒரு சாதனத்தை கண்டுபிடிப்பர்... அடுத்த ஆண்டு மார்ச் மாதம், பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிக ஆழமான மரியானா அகழியில் ஒரு பழங்கால இனம் கண்டுபிடிக்கப்படும்..

வியப்பு 5
குறிப்பாக அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, அமெரிக்காவிலிருந்து 750 அடி உயர மெகா சுனாமி அலை சான் பிரான்சிஸ்கோவை தாக்கும் என்று இந்த 5 விஷயங்களையும் கணித்துள்ளார். வழக்கமாக, வேற்றுகிரகவாசிகள் பூமியில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதத்தை தூண்டும் என்றாலும், வரும் டிசம்பரில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று சொல்லி உள்ளது, மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications