அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வீட்டில் எப்பிஐ அதிரடி சோதனை- 13 மணிநேர ரெய்டில் சிக்கிய 6 ரகசிய ஆவணங்கள்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் வீட்டில் அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஜோ பிடன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் தற்போதைய அதிபரான ஜோ பிடன், 2009-2016-ல் அந்நாட்டின் துணை அதிபராகவும் இருந்தார். அப்போதைய அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் பல முக்கிய ஆவணங்களை துணை அதிபராக இருந்த நிலையில் தமது வீட்டில் ஜோ பிடன் பதுக்கி வைத்தார் என்பது புகார்.

உக்ரைன், சீனா, ஈரான் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் மிக முக்கியமான ஆவணங்களைத்தான் ஜோ பிடன் தமது வீட்டில் பதுக்கினார் என கூறப்பட்டது. ஈரானின் ஏவுகணை திட்டம், சீனாவின் உளவுத்துறை கட்டமைப்பு தொடர்பானவையாம் இந்த ஆவணங்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது அமெரிக்கா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிபர் ஜோ பிடனின் வீட்டிலேயே நுழைந்து அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை சுமார் 13 மணிநேரம் நடைபெற்றது. எப்.பி.ஐ.-ன் இந்த சோதனையின் முடிவில் 6 முக்கியமான ரகசிய ஆவணங்கள், ஜோ பிடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோ பிடன், ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதில் எந்த ஒரு வருத்தமும் எனக்கு இல்லை என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications