"ஆபத்து".. எல்லாரும் அழியபோறாங்க.. 2046-க்கு பின் "அந்த" அதிசயம்.. பாபா வங்காவின் அதிர்ச்சி கணிப்பு
2016-க்கு பிறகு மனிதனின் ஆயுள் 100ஐ தாண்டி செல்லும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்
நியூயார்க்: பாபா வங்கா கணித்துவிட்டு போன ஒரு செய்தி, தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. என்ன அது?
2 மாதங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர் பகீரை கிளப்பிவிட்டார்.. அவர் கியூபாவை சேர்ந்தவர்.. பெயர் மோனி விடன்ட்டே..
இந்த பெண்மணி கணித்து சொன்னது பலமுறை நடந்துள்ளது.. அந்தவகையில், இப்போது, மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்...

டேஞ்சர்
மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்.. அதுமட்டுமல்ல, அமெரிக்காவுடன் நெருக்கமாக மற்றும் உலகத்தில் முன்னணி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்நாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியுள்ளார்...

நாஸ்டர்டாம்
சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்று மோனியின் கணிப்பு, உலக நாடுகளை கலங்கடித்து கொண்டிருக்கிறது.. ஆனால், இப்படி நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து சொல்வதில் முன்னோடி பாபா வாங்கே என்பவர்.. இவர் பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை உலக மக்களால் மதிக்கப்படுகிறார்.

85% நிஜங்கள்
காரணம், 12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும் என்ற பல விஷயங்களை பல வருடங்களுக்கு முன்பே கணித்து சொன்னார்

பஞ்சம் & வெள்ளம்
அதுமட்டுமல்ல, ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றும் அறுதியிட்டு சொல்லி உள்ளார்.. இவர் கணித்து விட்டு போன அத்தனையும் நடந்துள்ளது.. அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என்பது முதல், இந்த 2022ல் ஆஸ்திரேலியாவில், சீனாவின் தென் மாகாணங்களில் வெள்ளம் ஏற்படும் என்று கணித்து கூறியதும் பலித்துவிட்டது.. எனவே, ஒவ்வொரு வருடமும் பாபா வாங்கா சொல்லிய கணிப்புகள் மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்படும்.

ராஜா 100 வயது
அதிலும், பாபா வங்காவின் முக்கிய கணிப்பு, "உலகம் பூராவும் கொரோனா நோய் தொற்று, நோய், அழிவு நிச்சயம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.. கொரோனா என்று பெயரை குறிப்பிட்டு பாபா வங்கா கணித்துள்ளதையடுத்து, உலக மக்கள் ஆச்சரியப்பட்டு போனார்கள்.. இந்நிலையில், கடந்த 2 தினங்களாகவே பாபா வாங்கா மீண்டும் பேசப்பட்டு வருகிறார்.. இதற்கு காரணம் என்னவென்றால், பிரிட்டிஷ் ராஜாவாக சார்லஸ் பொறுப்பேற்றதுதான்.. சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால், அவரது ஆட்சிக்கு முடிவே இல்லை என்று பாபா வங்கா கணித்து விட்டு போயுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தற்போது கூறுகிறார்கள்..

ஆபரேஷன் + சேஞ்ச்
அதாவது, இன்னும் 24 ஆண்டுகள் வரை சார்லஸ் உயிருடன் இருந்தால், அவரது ஆட்சியே எல்லா காலத்துக்கும் தொடரும் என்பதே இவரது கூற்றாக உள்ளதாம்.. அதேபோல, 2046-க்கு பிறகு, மனித குலம் 100 வயதை கடந்தும் வாழும் என்றும் பாபா வங்கா கணித்து சொல்லி உள்ளாராம்.. அதாவது 2046-க்கு பிறகு மனிதனின் ஆயுட்காலம் 100 வயது இருக்கும்.. 100 வயது வரை மனிதர்கள் இயல்பாக வாழுவார்கள் என்று கூறியுள்ளாராம்.. இப்படி கணித்து சொல்வதற்கு காரணம், அறிவியல்களின் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகளால் சாத்தியமாகும் என்றும் விளக்கம் கூறியுள்ளாராம்.. இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை என்றாலும், 85 சதவீதம் இவர் கணித்தது பலித்துள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது..!












Click it and Unblock the Notifications