விவாதத்தில் தடுமாறும் பைடன்! 2016 தேர்தலை நினைத்து பயப்படும் ஜனநாயக கட்சி! வேட்பாளரை மாற்ற திட்டம்?
நியூயார்க்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு பதில் வேறு வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் ஒருபகுதியாக தற்போதைய அதிபரும், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும் நேரடி விவாதங்களில் பங்கேற்பது வழக்கம். இந்த விவாதங்கள் பல கட்டங்களாக நடைபெறும். மட்டுமல்லாது அதிபர் தேர்தலில் இது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த விவாதம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கையில் கடந்த 27ம் தேதி, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே விவாதம் தொடங்கியது. இதனை சிஎன்என் தொலைக்காட்சி நேரடியாக தொகுத்து வழங்கியது. விவாதத்தில் ஜோ பைடனின் நடவடிக்கைகள் அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் விவாதங்களில் பங்கேற்க பைடனின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே பைடன் தன்னுணர்வு இல்லாமல் நடந்துக்கொண்டிருக்கிறார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எங்கோ பார்த்த மாதிரி நிற்பதும், அவரது உதவியாளர் நினைவுப்படுத்திய பின்னர் திரும்பி நிற்பதும் வீடியோக்களாக வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி இருக்கையில் இந்த விவாத நிகழ்ச்சியில் ட்ரம்பின் கேள்விக்கு பைடனால் பதில் சொல்ல முடியவில்லை. திக்கி திணறி வருகிறார். பணவீக்கம், சீனா ரஷ்யா பிரச்னைகள், ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது, உக்ரைன் போருக்கான நிதியுதவி உள்ளிட்ட விவகாரங்களில் பைடன் நிர்வாகத்தை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பைடனால் உடனடியாக பதிலடி கொடுக்க முடியவில்லை.
இருப்பினும் தனது பாணியில், கருக்கலைப்பு விஷயம் மற்றும் வெள்ளை மாளிகை தாக்குதல் குறித்து ட்ரம்புக்கு எதிராக பைடன் தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இப்படியாக விவாதம் நடைபெற்றிருக்கிறது.
இந்த விவாத நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. இப்படி பெறப்பட்ட கருத்துக்களில் பலரும் டிரம்புக்குதான் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ஜனநாயக கட்சி அதிருப்தியடைந்திருக்கிறது. இந்த விவாதம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக சரிவை சரிகட்ட வேண்டிய நெருக்கடிக்கு கட்சி தள்ளப்பட்டிருக்கிறது.
இதனால் கட்சிக்குள் மாற்று வேட்பாளர் குறித்த பேச்சு அடிப்பட தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே பைடனுக்கு பதிலாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவை களமிறக்க பேச்சுகள் அடிப்பட்டன. தற்போது விவாத நிகழ்ச்சியில் பைடனின் சொதப்பல் காரணமாக இந்த கருத்துக்கள் வலுப்பெற தொடங்கியுள்ளன. ஏனெனில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டன் களமிறக்கப்பட்டார். எதிர் தரப்பில் ட்ரம்ப் இருந்தார்.
அப்போதும் இதேபோல விவாதங்கள் நடைபெற்றன. ஹிலாரி விவாதத்தில் சொதப்பினார். அந்த தேர்தலில் ட்ரம்ப்தான் வெற்றி பெற்றார். எனவே இந்த தேர்தலிலும் அந்தமாதிரி நடந்துவிடக்கூடாது என்பதில் குடியரசுக் கட்சி கவனமாக இருக்கிறது. எனவேதான் மாற்று வேட்பாளர்கள் குறித்த பேச்சு அடிபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications