திடீரென வானத்தில் அது என்ன? பார்க்க நெருப்பு பந்து போல சிவப்பு நிறத்தில்.. அதிர வைத்த வீடியோ!
சென்னை: திடீரென எதிர்பாராமல் வானத்தில் தோன்றிய புள்ளி விஞ்ஞானிகள், மக்கள் பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. புளோரிடா, ஓஹியோ மற்றும் பல பகுதிகளில் வினோதமான சிவப்பு நிற சூரியன் காணப்பட்டது. இந்த வினோத நிறத்தைக் கண்டு சிலர் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மக்கள் பலரும் குழப்பம் அடைந்தனர்.
சிவப்பு சூரியன்: புளோரிடாவில் நிகழ்ந்த வினோதம்
நேற்று முதல்நாள் புளோரிடாவில் வினோதமான சூரிய அஸ்தமனம் நிகழ்ந்தது. ஒரு நெருப்பு பந்து கருஞ்சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் தோன்றி வானத்தில் மிதப்பது போல சூரியன் வினோதமாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருந்தது. சிவப்பு நிறத்தில் திடீரென சூரியன் வெட்டி ஒட்டியது போல் வித்தியாசமான நிறங்களில் இருந்ததைக் கண்டு மக்கள் குழப்பமடைந்தனர். சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் இணையம் முழுக்க டிரெண்டாவதோடு, பல கருத்துகளையும் பெற்றுள்ளன.
இதனைப் பார்த்த சிலர், நாம் ஒரு செயற்கையான சிமுலேஷனில் வாழ்வதற்கான சான்று இது என்று கூறினர். மேலும் சிலர் மேட்ரிக்ஸில் நாம் வாழ்கிறோம் என்பதற்கு இதுவே சான்று என்றும் கூறினர். இன்னும் சில நெட்டிசன்கள் முந்தைய நாட்களில் ஓஹியோவில் எடுக்கப்பட்ட சூரியனின் இதே போன்ற படத்தை பதிவிட்டார்.

சில புகைப்படங்களில், சூரியன் அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. இன்னும் சிலவற்றில் மூடுபனி வெள்ளையாகவும், சிவப்பாகவும் தோன்றுகிறது. சில படங்கள் இரண்டு சூரியன்களைக் காட்டுவது போலவும் தோன்றியது. பிரகாசமான சிவப்பு நிறம் காரணமாக சமூக ஊடகங்களில் சிலர் தாங்கள் செவ்வாய் கிரகத்தை பார்ப்பதாகக் கூட நினைத்தனர்.
"நாம் அன்று பார்த்தது செவ்வாயா அல்லது நிலவா? ஒரு கணம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது," என்று நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர்.
சிவப்பு சூரியன் தோன்றக் காரணம் என்ன?
இந்த நிகழ்வுக்கு ஒரு சரியான விளக்கம் இருக்கிறது. வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சூரியன் இதுபோன்ற வண்ணங்களை வெளிப்படுத்த முடியும். இந்த குறிப்பிட்ட நிகழ்வில், கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் புகையே இதற்குக் காரணம். இது ஒரு அரிய வளிமண்டல நிகழ்வு. அதிக மாசுபாடு உள்ள இடங்களிலும் இது நிகழலாம்.
“That’s not the Moon, the Moon is above us”
— Concerned Citizen (@BGatesIsaPyscho) June 1, 2025
Sunset over Florida this weekend confuses Floridians pic.twitter.com/Fvxh2u4NWH
வானியல் வல்லுனர் ஆண்ட்ரூ ஸ்டுட்ஸ்கே, "புகை மேல் வளிமண்டலத்தை அடையும்போது, இதுபோன்ற விளைவு ஏற்படுகிறது" என்றார். புகையினால், தெரியும் ஒளிக்கற்றை பாதிக்கிறது. பொதுவாக, நாம் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களைப் பார்க்க முடியும். ஆனால் காட்டுத் தீயின் புகை குறுகிய அலைநீளங்களான பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் வயலட் ஆகியவற்றைத் தடுக்கிறது. எனவே சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் மட்டுமே தெரியும். அதையே புளோரிடாவில் உள்ள மக்கள் பார்த்தனர்.
இதற்கிடையில், "இரண்டாவது சூரியன்" தோன்றியது போன்ற விளைவு புகையின் மூலம் ஒளி சிதறல் அடைவதால் ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் காணப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. 1686 இல் டாக்டர் ராபர்ட் பிளாட் "இரட்டை சூரிய அஸ்தமனம்" பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
புளோரிடாவில் வினோதமான பிரகாசமான சிவப்பு சூரியன் காணப்பட்டதற்கான காரணத்தை வானிலை ஆய்வாளர்கள் விளக்கினர். கனடாவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக உருவான புகைமூட்டம் வளிமண்டலத்தில் கலந்ததால் இந்த நிகழ்வு ஏற்பட்டது. இது ஒரு அரிய நிகழ்வு என்றாலும், இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளனர்.
-
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
சென்னையில் இன்று மழை விடாது! இடி, மின்னலோடு கொட்ட போகுது! 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications