டிரம்ப் முடிவால்.. உலகம் முழுக்க 1 கோடி பேருக்கு எய்ட்ஸ் ஏற்பட போகிறது.. உலக சுகாதார மையம் வார்னிங்
சென்னை: கடந்த 20-30 வருடங்களுக்கும் மேலாக உலக அளவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதில், நோய் தீவிரத்தை குறைப்பதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வந்தது. ஆனால் இப்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் DOGE தலைவர் எலான் மஸ்க் ஆகியோரின் நடவடிக்கை காரணமாக உலக அளவில் எச்ஐவி நோய் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உலகளவில் ஒவ்வொரு நாளும் 2,000 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிவிப்பின் படி டிரம்ப் எடுத்த முடிவால் உலக அளவில் எச்.ஐ.வி தொற்றுகள் புதிய உச்சம் அடைய போகிறது என்று எச்சரித்து உள்ளது. அப்படி டிரம்ப் என்னதான் நடவடிக்கை எடுத்தார்?
Elon Musk தலைமையிலான DOGE (Department of Government Efficiency) - டிரம்ப் உருவாக்கிய ஆலோசனைக் குழு - USAID (சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க ஏஜென்சி) எனப்படும் சர்வதேச நிதியை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. முக்கியமாக வெளிநாட்டு உதவி ஒப்பந்தங்களில் 90% ஐ குறைப்பதாகவும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்த அமெரிக்க உதவியாக வழங்கப்பட்டு வந்த $60 பில்லியனை நிறுத்துவதாகவும் அறிவித்து உள்ளது வெளிநாட்டு நிதியுதவியை நிறுத்துவதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு உலகம் முழுக்க பலரின் மரணத்திற்கு காரணமாக மாறிவிடும் என்று ஐநா எச்சரித்து உள்ளது.

டிரம்ப் மேற்கொண்டு உள்ள இந்த நடவடிக்கையால் எச்.ஐ.வி நோய்கள் உயரும் அபாயம் உள்ளது. 2025 மற்றும் 2030 க்கு இடையில் 4.4 முதல் 10.8 மில்லியன் புதிய HIV தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது 1 கோடி பேருக்கு கிட்டத்தட்ட டிரம்ப் எடுத்த இந்த முடிவால் எச்.ஐ.வி ஏற்பட போகிறது. 7.70,000 முதல் 2.9 மில்லியன் HIV தொடர்பான இறப்புகள் ஏற்படக்கூடும் என்று இது தொடர்பாக நடத்தப்பட்ட லான்செட் ஆய்வு கண்டறிந்துள்ளது.
அதிர்ச்சி ஆய்வு
எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கான அறக்கட்டளையின் (amfAR) ஆய்வின்படி, அமெரிக்காவின் இந்த நிதி மூலம் 20 மில்லியனுக்கும் அதிகமான எச்.ஐ.வி நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 270,000 பேர் இதன் மூலம் பணியமர்த்தப்பட்டு எய்ட்ஸ் நோய்க்கு எதிராக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இப்போது அமெரிக்கா இந்த நிதியை நிறுத்தி உள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் 6.3 மில்லியன் பேர் எய்ட்ஸ் காரணமாக பலியாக வாய்ப்புகள் உள்ளன. அதாவது 63 லட்சம் பேர் சாகப்போகிறார்கள். 87 லட்சம் பேர் நேரடியாக எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன, என்று ஐநா எச்சரித்து உள்ளது.
அமெரிக்கா நிதி உதவி
அமெரிக்க பொதுவாக உலக நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும். பல திட்டங்கள், வளர்ச்சி பணிகளுக்கு நிதி உதவி வழங்கும். இதை சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதி என்று அழைப்பார்கள்.
இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சியின் (USAID) நிதியை முடக்கும் முடிவை எடுத்து உள்ளார். இதனால் உலக எதற்கும் அமெரிக்கா நிதி உதவி அளிக்காது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பெற்று வந்த நிதியும் பாதிக்கப்படும். சுகாதாரம் மற்றும் பிற திட்டங்கள் தொடர்பாக இந்தியா பெற்று வந்த நிதி பாதிக்கப்படும் என்பதால் பல திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அமெரிக்க நிதியில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொண்டு நிறுவன செயல்பாடுகள், சில அரசு செயல்பாடுகள் என்று எல்லாம் முடக்கப்பட்டு உள்ளன. USAID எனப்படும் இந்த நிதி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications