H1B விசா.. சினிமா பாணியில்.. கிளைமேக்ஸ் நேரத்தில்.. அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கு வந்த பெரிய சிக்கல்!
நியூயார்க்: H1B விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, Green Card வைத்திருக்கும் நண்பரை திருமணம் செய்து கொள்ளலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த விவாதம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண், தனது போஸ்டில் விசா தொடர்பான மன அழுத்தத்தையும், எதிர்கால அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் பணிபுரியும் H1B விசாதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், கிரீன் கார்டு பெறுவதில் உள்ள தாமதத்தையும் இது உணர்த்துகிறது.

விசா விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள்
இந்தக் கேள்வி, சமூக ஊடகங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் கனவுடன் வாழும் இந்தியர்கள் மத்தியில் இது ஒரு பொதுவான விவாதமாக மாறியுள்ளது. விசா விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள், கிரீன் கார்டு பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை இத்தகைய கேள்விகளுக்கு காரணமாக அமைந்துள்ளது .
நெட்டிசன்கள் பலரும் இந்தப் பதிவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். விசா கட்டண உயர்வு போன்ற சமீபத்திய சம்பவங்களால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவே இது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் பலர், விசா மற்றும் கிரீன் கார்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்தப் பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்தியா அமெரிக்கா விசா
அதிபர் டிரம்பின் H-1B விசா திட்ட சீர்திருத்தம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களையும், திறமையான நிபுணர்களையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 செப்டம்பர் 19 அன்று, அமெரிக்க நிர்வாகம் எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தது. எச்-1பி திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து நூறாயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. தற்போது இதற்கு டிரம்ப் செக் வைத்துள்ளார்.
எச்-1பி விசா
எச்-1பி விசா மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். இதை ஒருமுறை புதுப்பித்து மொத்தம் ஆறு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். விண்ணப்பதாரர்கள் அமெரிக்க முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்பட வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 65,000 விசாக்கள் என்ற உச்சவரம்பு உள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து மேம்பட்ட பட்டம் பெற்றவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அதிக தேவை காரணமாக, விசாக்கள் பொதுவாக லாட்டரி முறை மூலம் ஒதுக்கப்படுகின்றன.
எச்-1பி விசா பெறுபவர்கள் யார்?
எச்-1பி திட்டம் முக்கியமாகத் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பிற சிறப்புத் துறைகளில் பணிபுரியும் உயர் திறன்கொண்ட வெளிநாட்டு நிபுணர்களுக்குப் பயனளிக்கிறது.
2015 முதல் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட எச்-1பி விண்ணப்பங்களில் 70% க்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன. சீனர்கள் இரண்டாவது பெரிய குழுவாக உள்ளனர். இவர்கள் சுமார் 11% விசாக்களை பெற்றுள்ளனர்.
2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை, சுமார் 400,000 எச்-1பி விசாக்களில் 72% இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஹெச்.சி.எல், விப்ரோ உள்ளிட்ட முன்னணி இந்திய ஐ.டி நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் சுமார் 20,000 ஊழியர்களுக்கு விசா வழங்கி உள்ளது. இப்போது புதிய விதியால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியர்கள் இடையே திருமணம் நடப்பதில் சிக்கல்
அமெரிக்காவில் இனி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ஆண்கள் பெண்கள் இடையே திருமணம் நடப்பது நாளுக்கு நாள் குறைய வாய்ப்பு உள்ளது. அங்கே எச் 1 பி விசா இல்லமால் மற்ற விசாவில் உள்ளவர்கள் இனி அந்த விசாவை பெறுவது சிக்கல் ஆகும்.
இதனால் எச் 1 பி விசா உள்ள இந்தியர்களை மட்டுமே பெண்கள், ஆண்கள் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் மற்ற விசா உள்ள இந்தியர்கள் திருமணம் செய்ய முடியாமல் போகலாம். இன்னும் ஒருபடி மேலே போனால் கிரீன் கார்டு உள்ள இந்தியர்களுக்கு மட்டுமே அங்கே திருமணம் நடக்கும் சூழல் கூட நிலவும் அபாயம் ஏற்படுகிறது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications