Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டொங் டொங்! டைட்டானிக் கப்பலுக்கு அருகே.. கடலுக்கு அடியில் கேட்ட சத்தம் இதுதானா? இறுதி நொடி அலறல்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கனடா அருகே கடல் பகுதியில் மூழ்கிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நீர் மூழ்கி கப்பலை தேடுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் நேற்று இரவு இதன் தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதிலம் அடைந்த பாகங்களை பார்க்க பலருக்கும் ஆர்வம் உண்டு. டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்கள் தரைப்பரப்பில் இருந்து 3,800 மீ கீழே உள்ளது. டைட்டானிக்கின் சிதைந்த பாகங்கள் கனடாவில் உள்ள செயின்ட் ஜான்ஸ், நியூஃபவுண்ட்லாந்திற்கு தெற்கே சுமார் 435 மைல்கள் (700 கிமீ) தொலைவில் கடலுக்கு அடியில் உள்ளது.

As the Titanic submarine imploded under the sea, what Mysterious Banging sounds came from there?

இந்த உடைந்த கப்பலை பார்க்க பலர் ஆழ்கடலுக்கு செல்வது உண்டு. அந்த வகையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா பயணங்களை நடத்தும் நிறுவனம்தான் the OceanGate . இவர்களிடம் பல்வேறு சிறிய அளவிலான சுற்றுலா நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தி டைட்டன்.

டைட்டானிக் கப்பலை பார்க்க ஞாயிற்றுக்கிழமை நடுஇரவில் சென்ற இந்த கப்பல்தான் தற்போது உள்ளே சென்ற 6 மணி நேரத்தில் காணாமல் போய் உள்ளது. இந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் எடை 23,000lb (10,432 கிலோ) மற்றும் அவர்களின் கணக்கீடு படி, 13,100 அடி வரை ஆழத்தை எட்டும் திறன் கொண்டது.

காணவில்லை: இந்த கப்பலில் சென்ற நீர் மூழ்கி பைலட் உட்பட 5 பேர் காணாமல் போய் உள்ளனர். டைட்டன் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங், 58 வயதான பிரிட்டிஷ் தொழிலதிபர் மற்றும் ஆய்வாளர். பிரிட்டிஷ் தொழிலதிபர் ஷாஜதா தாவூத், 48, மற்றும் அவரது மகன், சுலேமான் தாவூத், 19, மற்றும் 77- ஒரு வயது பிரெஞ்சு ஆய்வாளர் பால்-ஹென்றி நர்கோலெட் ஆகியோர் பயணம் செய்து உள்ளனர்.

கனடா கடல் பகுதியில் டைட்டானிக்கை பார்க்க சென்ற போது பாதி வழியில் இது மயமாகி உள்ளது. சிக்னல் கட் ஆன காரணத்தால் இது காணாமல் போய் உள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டனில் இருந்து இந்த நீர் மூழ்கியை மீட்க மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

ராணுவ நீர்மூழ்கிக் கப்பலைப் போலல்லாமல், இந்த நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு குறைந்த சக்தி மட்டுமே உள்ளது மற்றும் அவற்றை ஏவுவதற்கும் திரும்பி மேலே வருவதற்கும் பெரிய எஞ்சின் எல்லாம் இல்லை. கீழே கொண்டு சென்று பாதி தூரத்தில் அப்படியே விடவும் அதன்பின் மேலே கொண்டு வரவும் தனியாக ஆதரவுக் கப்பல் தேவை. இதனால் இதைய மீட்பது கடினம் ஆகி உள்ளது.

சத்தம்: இந்த நிலையில் நேற்று தேடுதல் வேட்டையின் போது ஆழ்கடலில் திடீரென அந்த பகுதியில் சத்தம் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கப்பல் இருப்பதாக கருதப்படும் பகுதிகளுக்கு அருகே டொங் டொங் என்று சத்தம் வந்துள்ளது. மீட்பு கப்பல்களில் இருந்த சோனார் கருவிகளில் இந்த சத்தம் பதிவாகி உள்ளது.

இதையடுத்து சோதனையை உறுதிப்படுத்த இன்னொரு சோனார் கருவியை கொண்டு வந்துள்ளனர். அதிலும் இந்த சத்தம் உறுதியாக கேட்டுள்ளது. சரியாக 3 நிமிட இடைவெளியில் அங்கே சத்தம் விட்டு விட்டு கேட்டுள்ளது. இது அப்போது பெருத்த நம்பிக்கை அளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்பட்டது.

கப்பல் வெடித்த சத்தம்: மேலே சோனார் கருவிகள் இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு கீழே இருந்து பயணிகள் நீர்மூழ்கியில் அடித்து அடித்து சத்தம் எழுப்புகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இப்போதுதான் இது கப்பல் வெடித்த சத்தமாக இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேடுதல் பயணத்தை இன்று அதிகாலை முடிப்பதாக அமெரிக்க ராணுவம் அறிவித்து உள்ளது. பயணிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் நீர்மூழ்கியின் பாகங்கள் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை முடிவிற்கு வந்தது.

நீர்மூழ்கி கப்பலின் மேல், கீழ், பின் பக்க பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் இந்த தேடுதல் வேட்டை நிறைவு பெற்றதாகவும், நீர்மூழ்கி கடலில் மூழ்கி இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு அதில் பயணம் செய்த 5 பேருமே பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

கப்பலின் பாகங்களை காட்டி அமெரிக்க கடற்படை இந்த விபத்து குறித்து உறுதியாக அறிவித்தது. டைட்டானிக் கப்பலின் அருகிலேயே 1600 அடி ஆழத்தில் இந்த கப்பலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த விபத்திற்கு Catastrophic Implosionதான் காரணம் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது. அதாவது பேரழிவை ஏற்படுத்தும் உள்வெடிப்பு.

கப்பல் உள்ளே அதிக அழுத்தத்துடன் நீர் சென்று வெடித்துள்ளது. இந்த வெடிப்பு காரணமாக ஏற்பட்ட சத்தத்தை சோனார் கருவிகள் உள்வாங்கி இருக்கலாம். கடைசி நொடியில் ஏற்பட்ட வெடிப்பின் அலறல் இந்த விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+