Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து! 2032ல் மோதப்போகும் விண்கல்.. விஞ்ஞானிகள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், தெற்கு ஆசியா மீது மோத வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தெற்கு ஆசியாவில்தான் இந்தியா இருப்பதால் இக்கல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை அதிகம் என்பதாலும், வளர்ந்து வரும் நாடு என்பதாலும் பேரழிவிலிருந்து இந்தியா மீண்டு வர நீண்ட காலம் ஆகலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

asteroid space

விண்கற்கள் என்றால் என்ன?:

நமது பூமி உட்பட பல கிரகங்கள் விண்கற்களால்தான் உருவாகியுள்ளது. பூமியில் தண்ணீர் வந்தது கூட விண்கற்களால்தான் என்று பலர் கூறுகின்றனர். இப்படி மொத்த பிரபஞ்சத்திலும் விண்கற்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. இது எங்கு, எப்போது, எப்படி தாக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது. பூமியை பொறுத்தவரை ஒரு சில விண்கற்களை மட்டும் நம்மால் கணிக்க முடிந்திருக்கிறது. அந்த வகையில் 2024 YR4 எனும் விண்கற்கள் பூமியை தாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

2024 YR4 விண்கல்:

விண்கற்களை கண்டுபிடித்து ஆய்வு செய்ய உலகம் முழுவதும் பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சிலியில் உள்ள அட்லஸ் (Asteroid Terrestrial-impact Last Alert System - ATLAS) என்கிற விண்வெளி ஆய்வு மையமும் இதில் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் இந்த மையத்திலிருந்த விஞ்ஞானிகள் வானில் துலவிக்கொண்டிருந்தபோது, விண்கல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். இத பூமிக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தார்கள். இப்படிதான் 2024 YR4 என அந்த விண்கல்லுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

விண்கற்களால் என்ன ஆபத்து?:

உலகில் டைனோசர் என்கிற ஒரு பெரிய இனம் அழிந்து போனதற்கு இந்த விண்கற்கள்தான் காரணம். பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 1 கி.மீ விட்டம் கொண்ட விண்கல் ஒன்று பூமி மீது மோதியது. இதனால் சுனாமியும், நிலநடுக்கங்களும், எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது. சுனாமியையும், நிலநடுக்கங்களையும் டைனோசர்கள் ஓரளவு சமாளித்துவிட்டன. ஆனால் எரிமலை வெடிப்பை மட்டும் சமாளிக்க முடியவில்லை. எரிமலை வெடித்து உலகம் முழுவதும் புகையால் மூடியது.

எனவே தாவரங்களால் ஒளி சேர்க்கையை நடத்த முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாவரங்கள் அழிய தொடங்கின. பின்னர் அதை நம்பியிருந்த சைவ டைனோசர்கள் அழிந்தன. அதற்கு பிறகு, அதை கொன்று சாப்பிடும் அசைவ உண்ணி டைனோசர்கள் அழிந்தன. இவ்வளவு பாதிப்புகளை விண்கற்கள் ஏற்படுத்தும்.

பூமிக்கு எச்சரிக்கை:

அதெல்லாம் சரி, இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விண்கல் கூட, ஆபத்தானதா? என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு விஞ்ஞானிகள் ஆம் என்று பதிலளித்துள்ளனர். இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கு 100ல் 1 சதவிகிதம் வாய்ப்பு இருக்கும் என்று பிப்.5ம் தேதி கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த வாய்ப்பு 2.2 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இன்னும் நாட்கள் போக போக, பூமியை தாக்கும் வாய்ப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மெக்சிகோவில் உள்ள மாக்டலோனா ரிட்ஜ் கண்காணிப்பகம், டேனிஷ் டெலஸ்கோப் (ஐரோப்பா) உட்பட பல ஆய்வு மையங்கள் இந்த விண்கல்லை ஆய்வு செய்து அது குறித்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன.

தற்போது இந்த விண்கல் பூமியை விட்டு வேகமாக விலகி சென்றுக்கொண்டிருக்கிறது. மீண்டும் 2028ம் ஆண்டு பூமிக்கு நெருக்கமாக வரும். அதற்கு பிறகு 2032ல் இன்னொரு ரவுண்டு வரும்போதுதான் பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இதன் சைஸ் 40-90 மீட்டர், வேகம் மணிக்கு 61,200 கி.மீ. இந்த வேகத்தில் விண்கல் பூமியில் மோதினால், அது மோதிய இடத்தில் 50 கி.மீ சுற்றளவுக்கு புல் பூண்டு கூட இருக்காது. தெற்கு ஆசிய பகுதியை இந்த விண்கல் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதுதான் இதில் கவணிக்கப்பட வேண்டிய விஷயம். தெற்கு ஆசியாவில்தான் இந்தியா இருப்பதால் இக்கல் குறித்து மேலும் அச்சம் அதிகரித்துள்ளது.

தெற்கு ஆசியா மட்டுமல்லாது தென் அமெரிக்கா, பசிபிக், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளையும் இது தாக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+