ஈரானை விட மாட்டோம்.. இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு போனை போட்ட அமெரிக்க பைடன்.. கூட்டாக சபதம்!
நியூயார்க்: இஸ்ரேல் மீது ஈரான் திடீரென தாக்குதல்களை நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் ஈரானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் இடையே பயங்கரமான போர் மூண்டுள்ளது. இத்தனை நாள் இரண்டு நாடுகளுக்கு இடையில் புகைச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

200 ஏவுகணைகளை டிரோன்கள் உதவியுடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவி உள்ளது. இதுவரை 200க்கும் மேற்பட்ட ஈரானிய ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் இன்னும் இஸ்ரேலை அடையவில்லை. விரைவில் அவை இஸ்ரேல் மீது சென்று தாக்குதலை ஏற்படுத்தும். சில ஏவுகணைகள் தற்போதைக்கு இஸ்ரேலின் ராணுவ தளவாடங்களை தாக்கி லேசான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. உண்மையில் சேதம் எவ்வளவு என்று தெரியவில்லை.
அமெரிக்கா வழிமறிப்பு: இந்த ஏவுகணைகளை வழிமறிக்க அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் ராக்கெட் தாக்குதல்களை சமாளிக்க இஸ்ரேல் அயர்ன் டோம் எனப்படும் ஏவுகணைகளை இடமறித்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல் மீது ஈரான் திடீரென தாக்குதல்களை நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு போனை போட்டு அமெரிக்க பிடன் பேசிஉள்ளார் .
இதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஏமன், சிரியா மற்றும் ஈராக் ஆகியவற்றிலிருந்து இஸ்ரேலில் உள்ள இராணுவ தளவாடங்களுக்கு எதிராக இதுவரை இல்லாத வான்வழித் தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்தத் தாக்குதல்களை நான் மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன்.
எனது வழிகாட்டுதலின் பேரில், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அமெரிக்க இராணுவம் கடந்த வாரம் முழுவதும் அமெரிக்க போர் விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அழிப்பான்களை அப்பகுதிக்கு நகர்த்தியது. இந்த திட்டமிடலுக்கும் மற்றும் எங்கள் பாதுகாப்பு படையின் வேகமாக நடவடிக்கைக்கும் , அவர்களின் அசாதாரண திறமைக்கு நன்றி.
நாங்கள் வேகமாக செயல்பட்டதால் இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தையும் அகற்ற உதவினோம்.
இஸ்ரேலின் பாதுகாப்பில் அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு செய்லபடும். உங்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று பிரதமர் நெதன்யாகுவிடம் பேசினேன். இஸ்ரேலை அச்சுறுத்த முடியாது. அவர்கள் பாதுகாப்பிற்கு எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும். இஸ்ரேலின் எதிரிகளுக்கு நாங்கள் ஒன்றாக பதிலடி கொடுப்போம். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட விட மாட்டோம்.. இதை பற்றி ஜி 7 நாடுகளிடம் பேசி உள்ளோம். இஸ்ரேலுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் எதையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,. என்று கடுமையான வார்த்தைகளில் பிடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications