டிவியில் செய்தி வாசிக்கும்போதே.. பிளாஷ் நியூஸை பார்த்து.. ஆஆ.. அரண்ட செய்தி வாசிப்பாளர்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: செய்தி சேனலில் செய்தி வாசிக்கும் போதே செய்தியாளர் ஒருவர் பிளாஷ் நியூசை பார்த்து அரண்டு போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் டிக் டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது செய்தி வாசிப்பாளர் ஒருவரின் வீடியோ ஆகும்.

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் எச்எல்என் டிவி என்ற செய்தி சேனலில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. புளோரிடாவில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த சார்ல்ஸ் பெத்தேல் என்ற நபரின் 12 வயது குழந்தை காணாமல் போய் உள்ளார்.

 காணாமல் போனார்

காணாமல் போனார்

இவர் காணாமல் போய் 12 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. இதையடுத்து உள்ளூர் போலீசார் அந்த குழந்தையை தேடி உள்ளனர். அதன்பின் ஷெரிப் சார்பாக சிறுவனை தேடி உள்ளனர். பின்னர் இந்த கேஸில் எப்பிஐ உதவியை நாடி உள்ளனர். அந்த கேசில் எப்பிஐ மூலமும் விசாரணை நடைபெற்று உள்ளது. ஆனால் சிறுவனை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியையே உலுக்கி உள்ளது.

 என்னாச்சு

என்னாச்சு

எங்கே அந்த சிறுவன் கடத்தப்பட்டு விட்டதோ அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் போலீசாருக்கு எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. சிறுவனின் தந்தை சார்ல்ஸ்க்கு யாராவது எதிரிகள் இருக்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஆனால் எந்த விசாரணையிலும் போலீசாருக்கு எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து சார்ல்சை செய்தி நிறுவனம் ஒன்று பேட்டிக்காக அழைத்து உள்ளது.

 விசாரணை

விசாரணை

சிறுவன் காணாமல் போனது பற்றி 11 நாட்களுக்கு பின் சார்ல்சை பேட்டி எடுத்துள்ளனர். அப்போது பேட்டி எடுக்கும் போதே கீழே ஒரு பிளாஸ் நியூஸ் ஓடி உள்ளது. அந்த பிளாஸ் நியுசில்.. காணாமல் போன சிறுவனை கண்டுபிடித்துவிட்டனர். அந்த சிறுவன் அவர்கள் வீட்டின் கார் பேஸ்மெண்டில் உள்ள அறையில்தான் இருந்துள்ளார் என்று கூறி உள்ளனர். இதை பார்த்த செய்தி வாசிப்பாளர் நான்சி அரண்டு போய் உள்ளார்.

 அரண்ட செய்தி வாசிப்பாளர்!

அரண்ட செய்தி வாசிப்பாளர்!

ஆ என்று திக்கியபடியே.. சிறுவனின் அப்பா சார்ல்சை பார்த்து உங்கள் சிறுவன்.. உங்கள் வீட்டு பேஸ்மெண்டில்தான் இருந்துள்ளார் என்கிறார்களே. என்றதும்.. அதிர்ச்சியான அப்பா.. என்ன? என்று கேட்டுள்ளார். தொடர்ந்து பேசியவர்.. நான் அங்கே தேடினேன்.. என் மனைவியும் தேடினார்.. போலீசும் தேடினார்கள். இப்போது மட்டும் எப்படி அவர் அங்கே கிடைத்தார். நம்ப முடியவில்லையே என்றுள்ளார்.

கிளைமேக்ஸ்

கிளைமேக்ஸ்

இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில் தனது அப்பா தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார் . அதோடு அவரின் உடலிலும் பல இடங்களில் மோசமான காயங்கள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே அப்பாவிற்கு பயந்து பேஸ்மெண்டில் ஒளிந்துகொண்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனின் அப்பா சார்ல்சை கைது செய்தனர். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+