தீவிரவாதிகளின் புகலிடம்.. பாகிஸ்தானை சீண்டிய பென்டகன்.. மசோதா கொண்டு வந்த அமெரிக்க சபை- பரபர மோதல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாகிஸ்தானுக்கு எதிராக 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முக்கிய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றியடைய பாகிஸ்தான் முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது. அங்கு தாலிபான்களுக்கு தொடர்ந்து ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான்தான் உதவி வந்தது. தாலிபான் அமைப்பை உருவாக்கியதில் பாகிஸ்தான்தான் முக்கிய பங்கு வகித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகள் பல தாலிபான்களின் வெற்றியால் பாகிஸ்தானை விமர்சனம் செய்து வருகின்றன. தாலிபான்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தது நீங்கள்தான், அமெரிக்காவிடம் நிதியையும் பெற்றுக்கொண்டு தாலிபான்களுக்கு உதவியும் செய்து உள்ளீர்கள் என்று பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

 செனட்

செனட்

இந்த நிலையில்தான் அமெரிக்காவில் செனட் சபையில் பாகிஸ்தானுக்கு எதிராக மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, கண்காணிப்பு, பொறுப்பேற்பு என்ற தலைப்பில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தஹ்னில் அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட்டது, அங்கு உள்ள தீவிரவாத இயக்கங்கள் குறித்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளன.

மசோதா

மசோதா

முதல் கோரிக்கை, தாலிபான் அரசு மீது பொருளாதார, வர்த்தக தடைகளை விதிக்க வேண்டும். ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிறது என்றால் ஆப்கானிஸ்தான் மீதும் தடை விதிக்க வேண்டும் என்று இதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதெல்லாம் போக தாலிபானின் வெற்றிக்கு பாகிஸ்தான் எப்படி உதவியது என்று அமெரிக்கா விசாரிக்க வேண்டும் என்று இந்த மசோதாவில் மிக முக்கியமான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

விசாரனை

விசாரனை

அதாவது தாலிபானுக்கு பாகிஸ்தான் எப்படி எல்லாம் உதவியது என்று சர்வதேச விசாரணை நடத்த மசோதாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 20 வலிமையான செனட்டர்கள் இந்த மசோதாவை தாக்கல் செய்து உள்ளனர். இந்த மசோதா பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பி உள்ளது. பாகிஸ்தான் ஏற்கனேவே ஐநா அவையில் பெரிய அளவில் கவனிக்கப்படாத நிலையில் அமெரிக்காவின் இந்த மசோதா பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

Recommended Video

    மீண்டும் ஒரு பனிப்போரை America விரும்பவில்லை.. ஐநாவில் Joe Biden பேச்சு
    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. பென்டகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாகிஸ்தான் மீதான அமெரிக்காவின் கவலைகள் குறித்து பென்டகன் பல முறை வெளிப்படையாக, நேர்மையாக பேசி இருக்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் நிறைய தீவிரவாத அமைப்புகள் உள்ளன. தீவிரவாதிகளின் சொர்க்கமாக இந்த பகுதி உள்ளது.

    பென்டகன்

    பென்டகன்

    தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் இது தொடர்பாக தொடர்ந்து பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசி வருகிறோம். தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் மக்களும் பலியானதை அந்த நாட்டு தலைவர்கள் மறக்க கூடாது. அங்கு இருக்கும் தீவிரவாத அமைப்புகளால் பாகிஸ்தான் மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    சட்டம் டிரோன்

    சட்டம் டிரோன்

    சட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து செயல்படும். சட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம் என்று டிரோன் தாக்குதல்களை குறிப்பிட்டு பென்டகன் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதாவது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் டிரோன் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது போல பென்டகன் இந்த செய்தி குறிப்பை வெளியிட்டு உள்ளது.

    மார்க்கெட்

    மார்க்கெட்

    வெறும் 24 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக பென்டகன், அமெரிக்க செனட் சபை செயல்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இது கேள்விக்குறியாக்கி உள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரம் இதனால் நேற்று மட்டும் அந்நாட்டு சந்தையில் 3 சதவிகிதம் சரிவை சந்தித்தது. அதோடு ஒரு டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் 172ஐ தொட்டு உள்ளது. இதனால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்தையில் சந்தித்து இருக்கிறது. அமெரிக்காவின் தொடர் நடவடிக்கைகள் வரும் நாட்களில் பாகிஸ்தானை அதிகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+